டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எந்த மொழியையும் திணிக்கும் நோக்கம் அரசுக்கு இல்லை... பிரகாஷ் ஜவடேகர் விளக்கம்

Google Oneindia Tamil News

டெல்லி: யார் மீதும் எந்த மொழியையும் திணிக்கும் நோக்கம் அரசுக்கு இல்லை என்று தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

கஸ்தூரி ரங்கன் குழு இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு அளித்துள்ள பரிந்துரைகளில் மும்மொழிக் கொள்கையை கட்டாயமாக்க வேண்டும். இந்தி பேசாத மாநிலங்களில் அந்தந்த மாநில மொழி மற்றும் ஆங்கிலம் தவிர இந்தி மொழியைக் கட்டாயப் பாடம் ஆக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

There is no intention of imposing any language on anybody Says Minister Prakash Javadekar

இந்தி பேசப்படும் மாநிலங்களிலும் ஆங்கிலம், இந்தி தவிர வேறு இந்திய மொழி ஒன்று மூன்றாவது மொழியாகப் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்றும் அக்குழு பரிந்துரை செய்துள்ளது.இருமொழிக் கொள்கைதான் தொடர முடியும் என்று தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியைப் பள்ளிகளில் கட்டாயப் படமாக்க தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் பலரும் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர்.

பண்டித ஜவஹர்லால் நேரு, இந்தி பேசாத மாநில மக்கள் மீது இந்தி மொழி திணிக்கப்பட மாட்டாது என்று அளித்த உறுதிமொழியை மீறி, புதிய கல்விக் கொள்கை மூலம் இந்தி மொழியைத் திணிக்கும் முயற்சியில் மோடி அரசு ஈடுபட்டால், இந்தித் திணிப்பை எதிர்த்து 1965 மொழிப் போராட்டத்தை விட பன்மடங்கு எழுச்சியுடன் தமிழ்நாட்டில் போராட்டம் வெடிக்கும் என எச்சரித்துள்ளனர்.

நோட் பண்ணுங்கப்பா.. ராமதாஸை சீண்டி.. ஸ்டாலினை பாராட்டி.. பரபரக்கும் தினகரன் அறிக்கை!நோட் பண்ணுங்கப்பா.. ராமதாஸை சீண்டி.. ஸ்டாலினை பாராட்டி.. பரபரக்கும் தினகரன் அறிக்கை!

மிழகத்தில் இந்தியை திணிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில் மத்திய அமைச்சர் ஜவடேகர் விளக்கம் அளித்துள்ளார். யார் மீதும் எந்த மொழியையும் திணிக்கும் நோக்கம் அரசுக்கு இல்லை என்று கூறியுள்ளார்.
மேலும், இந்திய மொழிகள் அனைத்தையும் ஊக்குவிக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். தற்போது வெளியாகி இருப்பது வரைவு அறிக்கை மட்டுமே; மக்களின் கருத்துகளை கேட்டபிறகே முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, இருமொழிக் கொள்கைதான் தொடர முடியும் என மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளதாக, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

English summary
I&B Minister Prakash Javadekar on reported proposal of 3-language system in schools: There is no intention of imposing any language on anybody, we want to promote all Indian languages. It's a draft prepared by committee, which will be decided by govt after getting public feedback
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X