டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முடிவுக்கு வந்ததா முஸ்லீம் ஓட்டு வங்கி? பயம் காட்டும் பாஜக பிரச்சாரத்தில் உண்மையில்லை.. இதோ டேட்டா!

Google Oneindia Tamil News

டெல்லி: நடைபெற்று முடிந்த லோக்சபா தேர்தல் முடிவுகள் பல்வேறு புதிய சுவாரசியங்களையும், திருப்பங்களையும், இந்த நாட்டுக்கு சாட்சியாக அளித்துள்ளது.

இதில் ஒரு புள்ளி விவரம் முஸ்லீம்கள் இத் தேர்தலில் வழங்கிய பங்களிப்பு தொடர்பானது. நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய மதப் பிரிவான முஸ்லீம்கள், ஜனநாயக திருவிழாவில் அளித்த பங்களிப்பு பற்றிய சில தகவல்கள் இதோ:

2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, முஸ்லீம்கள் 14 சதவீதம் பேர் உள்ளனர். இந்த விகிதாச்சார அடிப்படையில் பார்த்தால், லோக்சபாவில் 76 பேர் முஸ்லீம் மதத்தை சேர்ந்த எம்பிக்களாக இருக்க வேண்டியது அவசியம். ஆனால், நடப்பு, லோக்சபாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முஸ்லீம்கள் எண்ணிக்கை 27 மட்டுமே.

ஜில் ஜில்னு வர்ற காற்று.. ஒடிக்கிட்டே இருக்குற பஸ்.. சென்னைவாசிகளுக்காக 50 குளுகுளு பேருந்துகள் ஜில் ஜில்னு வர்ற காற்று.. ஒடிக்கிட்டே இருக்குற பஸ்.. சென்னைவாசிகளுக்காக 50 குளுகுளு பேருந்துகள்

சற்று அதிகம்

சற்று அதிகம்

16வது லோக்சபாவில் வெறும் 23 முஸ்லீம் எம்.பி.க்களே இருந்தனர். சொல்லப்போனால் இப்போது மிக சிறிய அளவுக்கு அவர்கள் எண்ணிக்கை கூடியுள்ளது. ஆனால், இது விகிதாச்சார அடிப்படையிலான எண்ணிக்கையோடு ஒப்பிட்டால் மிக குறைவு. 1980ம் ஆண்டு லோக்சபாவில் 49 முஸ்லீம் எம்பிக்கள் இருந்தனர். இதுதான் லோக்சபா வரலாற்றில் அதிகப்படியான முஸ்லீம் பிரதிநிதிகளை பார்த்த ஆண்டு.

கடந்த லோக்சபா

கடந்த லோக்சபா

2014ம் ஆண்டு ஒரு மோசமான வரலாறு பாஜகவால் நிகழ்த்தப்பட்டது. அந்த தேர்தலில் பாஜக சார்பில் தேர்வான எம்பிக்களில் ஒருவரும் முஸ்லீம் இல்லை. மெஜாரிட்டி பலம் கொண்ட ஒரு கட்சியில், முஸ்லீம் எம்பிக்களே இல்லாதது அதுதான் இந்திய வரலாற்றில் முதல் முறை. இப்போதைய லோக்சபாவில் அந்த அவப்பெயரை துடைத்துக் கொண்டுள்ளது பாஜக. ஆம்.. மேற்கு வங்க மாநிலத்திலிருந்து பாஜக சார்பில் முஸ்லீம் மதத்தை சேர்ந்த சுமித்ரா கான் எம்பியாக தேர்வாகியுள்ளார். ஆனால், இவர் ஒருவர்தான் பாஜக எம்பிக்களில் முஸ்லீம் என்பதையும் மறுக்க முடியாது.

வாக்கு வங்கி

வாக்கு வங்கி

ஒருபக்கம், அனைவருக்கும் வாய்ப்பு.. அனைவருக்கும் வளர்ச்சி.. என்று கோஷங்களை முன் வைத்து வருகிறார் மோடி. ஆனால், சமூகத்தில் ஒரு முக்கிய பிரிவான முஸ்லீம்களுக்கு பாஜக கட்சியிலேயே, உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை என்பதே நிதர்சனம். நாட்டின் 243 லோக்சபா தொகுதிகளில், குறைந்தது, 80 தொகுதிகள், 20 சதவீதம், அளவுக்காவது முஸ்லீம்களை கொண்டவை. ஆனால், இந்த தொகுதிகளில் பல்வேறு கட்சிகளையும், சேர்ந்த, 58 இந்து வேட்பாளர்கள்தான் வெற்றி பெற்றுள்ளனர். இதிலிருந்து முஸ்லீம் வாக்கு வங்கி என்ற ஒன்று இல்லை என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

வாக்கு வங்கி

வாக்கு வங்கி

ஒருபக்கம், அனைவருக்கும் வாய்ப்பு.. அனைவருக்கும் வளர்ச்சி.. என்று கோஷங்களை முன் வைத்து வருகிறார் மோடி. ஆனால், சமூகத்தில் ஒரு முக்கிய பிரிவான முஸ்லீம்களுக்கு பாஜக கட்சியிலேயே, உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை என்பதே நிதர்சனம். நாட்டின் 243 லோக்சபா தொகுதிகளில், குறைந்தது, 80 தொகுதிகள், 20 சதவீதம், அளவுக்காவது முஸ்லீம்களை கொண்டவை. ஆனால், இந்த தொகுதிகளில் பல்வேறு கட்சிகளையும், சேர்ந்த, 58 இந்து வேட்பாளர்கள்தான் வெற்றி பெற்றுள்ளனர். இதிலிருந்து முஸ்லீம் வாக்கு வங்கி என்ற ஒன்று இல்லை என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

உத்தர பிரதேசம்

உத்தர பிரதேசம்

மேலும், உ.பி.யில் 80 தொகுதிகளில், 62 பாஜக பாக்கெட்டுக்கு வந்துள்ளது. ஐந்தில் ஒருவர் முஸ்லீம் என்ற அளவில் உள்ள உத்தர பிரதேசத்திலேயே, முஸ்லீம் மதத்தை சேர்ந்த ஒரு வேட்பாளரை கூட நிறுத்தாமல் பாஜக இப்படி அமோக வெற்றி பெறுவது என்பது, நாட்டில், முஸ்லீம் வாக்கு வங்கி உள்ளதாக கூறப்படும் வாதத்தை தவிடுபொடியாக்குவதாக உள்ளது. குறிப்பிட்ட கட்சிக்கு, குறிப்பிட்ட தேவைக்காக முஸ்லீம்கள் வாக்களிப்பார்கள் என்று கூறி இந்துக்களிடம் பாஜக ஓட்டுக்களை கேட்டு வந்தது. ஆனால் புள்ளி விவரமோ வேறு மாதிரி உள்ளது கவனிக்கத்தக்கது.

பாஜகவுக்கே பலன்

பாஜகவுக்கே பலன்

20 விழுக்காட்டுக்கும் மேல் முஸ்லீம்களை கொண்ட நாட்டின் 80 தொகுதிகளில், 36 தொகுதிகளை பாஜக கைப்பற்றியுள்ளது. எனவே முஸ்லீம் ஓட்டு வங்கி என்ற வாதம் இனியும் பலனளிக்காது. முஸ்லீம்கள் பொதுவாக, தொகுதி அளவில் உள்ள அரசியலை வைத்துதான் ஓட்டளிக்கிறார்களே தவிர, பாஜக பயமுறுத்துவதை போல, மொத்தமாக சென்று, ஒரே நோக்கத்தில், நாடு முழுக்க வாக்களிப்பதில்லை என்பதே இப்புள்ளி விவரங்கள் சொல்லும் சேதி. இன்னும் சொல்லப்போனால், இந்த பிரச்சாரத்தால் பாஜக இந்துக்களின் ஓட்டுக்களை அதிகம் பெற்றுதான் பலனடைந்துள்ளது.

தேசிய தலைவர்கள்

தேசிய தலைவர்கள்

இந்திய முஸ்லீம் வாக்காளர்களுக்கு இருக்கும் ஒரு பெரிய பிரச்சினை, தேசிய அளவில் அவர்களுக்கான ஒரு தலைமை இல்லாதது. எனவே, மதசார்பற்ற கட்சிகள் என அறிவித்துக்கொண்டுள்ள, காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், திரிணாமுல், திமுக மற்றும் ராஷ்டிரிய ஜனதாதளம் போன்ற கட்சிகளுக்கு மாறி மாறி வாக்களிக்கிறார்கள். ஆனால் காங்கிரஸ் அசுர பலத்தோடு இருந்த 1952-1977ம் ஆண்டுகளுக்கு நடுவேயான காலகட்டத்தில், கூட முஸ்லீம்களின் பிரதிநிதித்துவம், லோக்சபாவில், 2 முதல் 7 சதவீதம் என்ற அளவில்தான் இருந்தது.

கட்சிகள்

கட்சிகள்

இந்தியாவில், முஸ்லீம்களுக்கான கட்சி என்றால், ஏஐஎம்ஐஎம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், ஏயூடிஎப், ராஷ்டிரிய உலமா கவுன்சில், எஸ்டிபிஐ, வெல்ஃபேர் கட்சி போன்றவைதான். ஆனால் இவையெல்லாம், ஒவ்வொரு மாநிலத்திலும் ஓரளவுக்கு செல்வாக்கு பெற்றவை. தேசிய அளவிலான கட்சிகளாக உருவெடுக்க முடியாதவை. எனவே இனியும், யாராவது முஸ்லீம் வாக்கு வங்கி இருப்பதாக கூறினால், அதை நம்ப தேவையில்லை.

English summary
There is no Muslim vote bank in India as Election results reveals the data.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X