டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கனரா வங்கி உட்பட பல வங்கிகள் இணைப்பு, மொத்தமே இனி 12 பொதுத்துறை வங்கிதான்: நிர்மலா அதிரடி

Google Oneindia Tamil News

Recommended Video

    Watch Video : Nirmala Sitharaman Pressmeet

    டெல்லி: கனரா வங்கி, உட்பட பல பெரிய வங்கிகள் வேறு சில வங்கிகளுடன் இணைக்கப்படுவதாக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தெரிவித்தார்.

    பொதுத் துறை வங்கி தலைவர்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ஆலோசனை நடத்தினார். பொதுத் துறை வங்கி தலைவர்களை சந்தித்த பிறகு நிர்மலா சீதாராமன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    There will be 12 public sector banks in India, says Finance Minister Nirmala Sitharaman

    பஞ்சாப் நேஷனல் வங்கி, ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ் மற்றும் யுனைடெட் வங்கி ஆகியவை இணைக்கப்படுகிறது. ரூ.17.5 லட்சம் கோடி ரூபாய் வணிகத்துடன் எஸ்பிஐக்கு அடுத்து நாட்டின் இரண்டாவது பெரிய பொதுத்துறை வங்கியாக இது உருவாகும்.

    இது, தற்போதைய பஞ்சாப் நேஷனல் வங்கி அளவைவிட, 1.5 மடங்கு பெரியதாகும். இந்த இணைப்பின் மூலம் நாடு முழுக்க 11, 437 கிளைகள் கொண்ட நெட்வொர்க்காக இவை மாறும்.

    இதேபோல, கனரா வங்கி மற்றும் சிண்டிகேட் வங்கி ஆகியவை ஒன்றிணைக்கப்படுகிறது. நாட்டின் 3வது பெரிய நெட்வொர்க் வங்கியாக இது மாறும்.

    இதேபோல, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, கார்பொரேஷன் வங்கி, ஆந்திரா வங்கி ஆகிய மூன்றும் இணைக்கப்படும்.

    இந்தியன் வங்கி- அலகாபாத் வங்கியுடன் இணையும். இந்த இணைப்பின் மூலம் 7வது பெரிய நெட்வொர்க்காக மாறும்.

    2017ல் 27 பொதுத்துறை வங்கிகள் இருந்தன. இன்றைய அறிவிப்புக்கு பிறகு நாட்டில் மொத்தமே, 12 பொதுத்துறை வங்கிகள்தான் இருக்கும். இவ்வாறு இணைக்கப்படுவதால், வங்கிகள் கடன் கொடுக்கும் அளவு அதிகரிக்கும், நெட்வொர்க் அதிகரிக்கும், வங்கி, வாடிக்கையாளர்கள், வங்கி பணியாளர்கள் என அனைத்து தரப்புக்கும் இதனால் நன்மை கிடைக்கும். இவ்வாறு நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

    English summary
    In 2017 there were 27 public sector banks after today's announcement there will be 12 public sector banks, says Finance Minister Nirmala Sitharaman
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X