டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டிச.1 முதல் இதெல்லாம் மாறி விட்டது மக்களே.. மறக்காமல் நினைவில் வச்சுக்கங்க...!

இன்றுமுதல் 5 முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளன

Google Oneindia Tamil News

டெல்லி: டிசம்பர் 1ம் தேதி முதல் இதெல்லாம் மாறி விட்டது மக்களே.. மறக்காமல் நினைவில் வைத்து கொள்ள வேண்டியது நமக்கு அவசியம்.

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பரம் மாதம் பல மாற்றங்களைமக்கள் கண்டு வருகிறார்கள். அந்த அடிப்படையில் டிசம்பர் 1ம் தேதியான இன்று முதல் ஐந்து முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளன.

நிறையப் பேருக்கு இது குறித்துத் தெரியுமோ என்னவோ. அதனால்தான் நாங்கள் அந்த ஐந்து மாற்றங்களையும் தொகுத்துக் கொடுக்கிறோம். நோட் பண்ணி வச்சுக்கங்க மறக்காம.

போராடும் விவசாயிகள்.. கைகளில் செங்கொடியுடன் களம் குதிக்கும் இடதுசாரிகள்.. 4ம் தேதி முதல் தொடர்மறியல்போராடும் விவசாயிகள்.. கைகளில் செங்கொடியுடன் களம் குதிக்கும் இடதுசாரிகள்.. 4ம் தேதி முதல் தொடர்மறியல்

 ஆர்டிஜிஎஸ் இனி 24 மணி நேரம்

ஆர்டிஜிஎஸ் இனி 24 மணி நேரம்

வங்கிகளில் ஆன்லைன் மூலமாக நாம் தற்போது NEFT, IMPS, RTGS ஆகிய முறைகளில் ஒருவருக்கு பணம் செலுத்தவும், வாங்கவும் பயன்படுத்துகிறோம். இதில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் நெப்ட் மற்றும் இம்ப்ஸ் ஆகியவற்றை 24 மணிநேரமும் பயன்படுத்த அனுமதித்தனர். இன்று முதல் ஆர்டிஜிஎஸ் சேவையையும் 24 மணி நேரமாக்கியுள்ளனர். இது ஆன்லைன் பணப் பரிவர்த்தனையி்ல ஈடுபடுவோருக்கு பெரும் உபயோகமாக இருக்கும்.

 காஸ் விலை

காஸ் விலை

வீடுகளுக்குப் பயன்படுத்தப்படும் காஸ் சிலிண்டர்களின் விலை ஒவ்வொரு மாதமும் முதல் நாளில் மாற்றியமைக்கப்படும். அந்த வகையில் இன்றும் விலை நிர்யணம் செய்யப்படும். விலை உயரலாம் அல்லது குறைக்கப்படலாம். அதை வாடிக்கையாளர்கள் இன்று எதிர்பார்க்கலாம்.

 ப்ரீமியத்தைக் குறைக்கலாமே

ப்ரீமியத்தைக் குறைக்கலாமே

இன்சூரன்ஸ் பாலிசி எடுத்திருப்போர் அதற்கான பிரீமியம் தொகையை இன்று முதல் பாதியாக குறைத்துக் கட்டும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே ஒருவர் தனது பிரீமியத்தை அப்டியே முழுமையாகவும் கட்டலாம், விரும்பினால் பாதியாக குறைத்தும் கூட கட்டலாம்.

 புது ரயில்கள்

புது ரயில்கள்

டிசம்பர் 1ம் தேதி முதல் புதிய ரயில்கள் பல அறிமுகப்படுத்தப்படுகிறது. தற்போது கொரோனா பரவல் காரணமாக ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதை விரைவில் சீரமைக்க ரயில்வே துறை தீவிரமாக செயல்பட்டு வருகிறது. சிறப்பு ரயில்களை அதிகரித்துள்ளனர். டிசம்பர் 1ம் தேதி முதல் புதிய ரயில்கள் சில ஓடத் தொடங்கும்.

 தவணை கட்டாவிட்டால் கட் ஆகாது

தவணை கட்டாவிட்டால் கட் ஆகாது

தற்போது கொரோணா காலம் என்பதால் பலரும் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். இதனால் இன்சூரன்ஸ் உள்ளிட்ட பலவற்றைக் கட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நாடும் கூட பொருளாதார ரீதியாக பல சிரமங்களைச் சந்தித்து வருகிறது. பலர் வாங்கிய கடன்களைக் கூட கட்ட முடியாமல் தவிக்கின்றனர். இந்த நிலையில் இன்சூரன்ஸ் பாலிசிக்கான தவணையைக் கட்ட முடியாவிட்டால் பாலிசி ரத்தாகாது என்ற புதிய உத்தரவு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதற்கு மாறாக பாலிசி பிரீமியத்தில் பாதியைக் குறைத்துக் கட்டலாம் என்ற சலுகை அமல்படுத்தப்பட்டுள்ளது.

English summary
These are changed from today December 1st 2020
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X