டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தண்ணீர் போராளி முதல் ஏழைகளின் பசியாற்றிய சினேகா வரை.. பிரதமரின் ட்விட்டர் கணக்கை நிர்வகித்த பெண்கள்

Google Oneindia Tamil News

டெல்லி: வெடிகுண்டு தாக்குதலில் உயிர் பிழைத்த பெண் முதல் தண்ணீர் போராளி வரை.. இந்த 7 பெண்கள்தான் பிரதமர் நரேந்திர மோடியின் ட்விட்டர் கணக்கை இன்று நிர்வகித்தனர்.

பெண்கள் தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடியின் ட்விட்டர் கணக்கை கையாள அனுமதி அளித்தார். அதன்படி வாழ்க்கையில் சாதித்த 7 பெண்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். இது மற்ற பெண்களுக்கு உத்வேகத்தை அளிப்பது போன்று இருந்தது.

மோடியின் ட்விட்டர் கணக்கை இன்று கையாண்டவர்களில் முதல் பெண் தமிழகத்தைச் சேர்ந்த சினேகா மோகன்தாஸ். இவர் புட்பேங்க் இந்தியா அமைப்பின் உரிமையாளர். இவர் தொடங்கி வெடிகுண்டு தாக்குதலில் மணிக்கட்டில் இருந்து இரு கைகளையும் இழந்தவர் முதல் நீர் போராளி வரை 7 சாதனை பெண்கள் ட்விட்டரில் தங்கள் அனுபவங்களை ட்வீட் போட்டனர்.

பசி இல்லாத தேசம்

முதலில் சினேகா மோகன்தாஸ். இவர் சென்னையைச் சேர்ந்தவர். இவர் புட்பேங்க் இந்தியா என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இதனால் மூலம் பசியை போக்குவதற்காக தெருவோரத்தில் வசிப்போர் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு 3 வேளையும் உணவை வழங்கி வருகிறார். இவரது லட்சியமே பசி இல்லாத தேசத்தை உருவாக்குவோம் என்பதுதான். தினமும் ஒருவருக்கு உணவு அளித்தால் உணவும் வீணாகாது, ஒருவரது பசியையும் ஆற்ற முடியும். எனவே அன்னதானம் செய்யுங்கள் என கேட்டுக் கொண்டுள்ளார்.

வெடிகுண்டு தாக்குதலால் கையை இழந்தவர்

இவருக்கு அடுத்த படியாக மாளவிகா ஐயர் மோடியின் ட்விட்டர் கணக்கை கையாண்டார். இவபுக்கு 13 வயதாக இருக்கும் போது ஒரு வெடிகுண்டு விபத்தில் மணிக்கட்டிற்கு கீழ் இரு கைகளையும் இழந்துவிட்டார். கால்களும் சேதமடைந்தது. எனினும் விடாமுயற்சியுடன் போராடி டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். அவர் ஊக்கமூட்டும் பேச்சாளராகவும் மாற்றுத்திறனாளி ஆர்வலராகவும் இருந்து வருகிறார். அவர் ட்விட்டரில் கைவிடுதல் என்பது எப்போதும் தேர்வு செய்யக் கூடாது. எல்லைகளை மறந்துவிடுங்கள். உலகமே உங்களுடையது என நம்பிக்கையுடன் இருங்கள் என்றார்.

காஷ்மீர் பெண்

அடுத்தப்படியாக பிரதமர் மோடியின் ட்விட்டரில் அனுபவத்தை பகிர்ந்தவர் ஆஃரீபா. இவர் காஷ்மீரை சேர்ந்தவர். கைவினை கலைஞர். காஷ்மீரின் பழங்கால கைவினை கலைகளை மீட்டெடுப்பதே எனது கனவாகும். இதன் மூலம உள்ளூர் பெண்களின் வாழ்க்கை தரம் மேம்படும். யாருடைய தயவும் இன்றி பெண்கள் சுதந்திரமாக இருப்பது மிகவும் முக்கியமானதாகும் என தெரிவித்துள்ளார்.

கல்பனா ரமேஷ்

பிரதமர் மோடியின் ட்விட்டரில் அனுபவத்தை பகிர்ந்தவர் கல்பனா ரமேஷ். இவர் ஒரு நீர் போராளியாவார். நீர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். தண்ணீரை பொறுப்பாகவும் சிக்கனமாகவும் செலவு செய்ய வேண்டும் என்கிறார். இவர் ஹைதராபாத்தை சேர்ந்த கட்டட கலைஞர் ஆவார். சிறு துளி பெரு வெள்ளம் என்கிறார். மழை நீர் சேகரிப்பு மூலம் தண்ணீர் சேமிப்பை வலியுறுத்தி வருகிறார். போராளியாக இருங்கள், ஆனால் வித்தியாசமாக இருங்கள். நீர் போராளியாக இருங்கள். அடுத்த தலைமுறைக்கு தண்ணீரை சேகரிக்க நம்மால் முடிந்த முயற்சியை ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

கைவினைஞர் விஜய் பவார்

அடுத்ததாக பிரதமர் நரேந்திர மோடியின் ட்விட்டர் கணக்கை நிர்வகித்தவர் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த விஜய் பவார். இவரும் கைவினைக் கலைஞர் ஆவார். இவர் மத்திய பிரதேசத்தின் பன்ஜாரா இனத்தவர்களின் கலைகளை மேம்படுத்தி வருகிறார். ஆயிரக்கணக்கான பெண்கள் இவருக்கு உதவி வருகிறார்கள். கலையை பாதுகாப்பதில் முழு அர்ப்பணிப்பு உணர்வு கொண்டுள்ள அவர் பெண்கள் தினத்தில் தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்வதில் பெருமை அடைகிறேன் என தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி என்னை ஊக்கப்படுத்தியதோடு நிதி கிடைப்பதிலும் உதவுவதாக தெரிவித்துள்ளார் என்று கூறியுள்ளார்.

காளான் உற்பத்தியாளர்

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த வீணா தேவி. இவர் காளான்களை உற்பத்தி செய்வதில் வல்லவர். இவர் பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கை நிர்வகித்தார் காளான் உற்பத்தியில் விருதுகளையும் வாங்கியுள்ளார். 43 வயதாகும் இவர் தவுரி பஞ்சாயத்தை சேர்ந்தவர். காளான் உற்பத்தி, பூச்சிமருந்தில்லா உணவு உற்பத்தி, இயற்கை உரம் தயாரித்தல் உள்ளிட்டவற்றை தயார் செய்து வருகிறார். 105 கிராமங்களில் 1500 பெண்களுக்கு காளான் உற்பத்தியை கற்றுக் கொடுத்தமைக்காக இவருக்கு விருது கிடைத்தது. இது போல் 700 பெண்களுக்கு செல்போனின் பயன்பாட்டை கற்றுக் கொடுத்ததற்காகவும் அவருக்கு விருது வழங்கப்பட்டது. இந்த பெண்கள்தான் இன்றைய தினம் ட்விட்டர் கணக்கை நிர்வகித்தனர்.

English summary
Here are the details of the women who handles PM Narendra Modi's twitter handles.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X