டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்திய பலவீனங்களை வெளிப்படுத்தும்...அந்த மூன்று விஷயங்கள்...ப. சிதம்பரம் விளாசல்!!

Google Oneindia Tamil News

டெல்லி: மோசமான பொருளாதார மேலாண்மை, கொரோனா வைரஸ் பரவல், சீனாவுடன் மோதல் ஆகிய மூன்றும் இந்தியாவின் பலவீனங்களை வெளிப்படுத்தியுள்ளது என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்க்கு ப. சிதம்பரம் எழுதி இருக்கும் சிறப்புக் கட்டுரையில் நடப்பு இந்தியப் பொருளாதாரம், மக்களின் எண்ண ஓட்டம் குறித்து குறிப்பிட்டுள்ளார். அதுவும் அவரது சொந்த ஊரான சிவகங்கை மக்களின் மனதை படம்பிடித்துள்ளார்.

These triple crisis has exposed India’s weaknesses says P. Chidambaram in his special story

அவர் தனது கட்டுரையில், ''கடந்த சில நாட்களுக்கு முன்பு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பிரவீண் சக்ரவர்த்தி இருவரும் இணைந்து இந்திய பொருளாதார மீட்பு குறித்து இந்து பத்திரிகையில் ஒரு கட்டுரை எழுதி இருந்தனர். அதில், மக்களிடம் நம்பிக்கை ஏற்படுத்துதல், வங்கியாளர்களிடம் நம்பிக்கை மீட்பது, சர்வதேச அமைப்புகளிடம் நம்பிக்கை ஏற்படுத்துதல் ஆகியவை குறித்து குறிப்பிட்டு இருந்தனர். இவை அனைத்தும் மூன்று மந்திரங்கள் என்று குறிப்பிட்டு இருந்தனர்.

இந்தக் கட்டுரை சாதாரணமான கட்டுரை அல்ல. மிகவும் வலிமை வாய்ந்து. இந்தக் கட்டுரையை எழுதி இருப்பவர் பத்து ஆண்டுகள் இந்தியாவின் பிரதமராக இருந்தவர். ஐந்து ஆண்டுகள் நிதியமைச்சராக இருந்து இந்தியப் பொருளாதாரத்தில் மிகப் பெரிய சீர்திருத்தங்களை கொண்டு வந்தவர்.

சக்ரவர்த்தி எழுதி இருக்கும் பொருளாதார ஆய்வு மருந்தாகிவிடுமா என்று கேட்கத்தோணும். ஆனால், ஒவ்வொருவரும் அவர் எழுதி இருக்கும் கட்டுரைகளை ஆய்வு செய்து பார்க்க வேண்டும். தங்களுடன் இணைந்துப் பார்க்க வேண்டும். இதை என்னுடைய சொந்த ஊரான சிவகங்கை மாவட்ட மக்களுடன் தொடர்புபடுத்திப் பார்க்க முயற்சித்தேன். இந்த கட்டுரையை சிவகங்கை மக்களின் பார்வையில் இருந்து கொடுக்கிறேன்.

மக்களின் பார்வை

மக்கள் செலவு செய்ய அஞ்சுகின்றனர். அவர்களிடம் பணம் இல்லை. வேலையை இழந்துள்ளனர். வேலையை இழந்து வருகின்றனர். உடல்நலம் பாதிக்கப்பட்டால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும். அவர்களிடம் சிறிய அளவிலான பணம்தான் உள்ளது. கொஞ்சம் அதிகமாக பணம் இருப்பவர்கள் தங்கத்தில் முதலீடு செய்கின்றனர். இது நிச்சயமற்ற முதலீடு. ஜூலை 31ஆம் தேதியுடன் இந்திய மக்களிடம் ரூ. 26,72,446 கோடி பணம் இருந்துள்ளது. தேவையும், டெபாசிட்டும் கடந்த 12 மாதங்களில் 12.0 சதவீதமகாக, 10.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. மக்கள் செலவிடுவது எல்லாம் காய்கறி கடைகள், மளிகைக் கடை, பழக்கடை, மருந்துக் கடைகள்தான். மறுபக்கம் சில்லறை வியாபாரிகளான துணிக்கடை, செருப்புக்கடை, மரச்சாமான் கடைகள், பொம்மைக் கடைகள், ஓட்டல்கள், மின்சாதனப் பொருட்கள் கடை ஆகியவற்றில் வாடிக்கையாளர்கள் இல்லை.

மருத்துவமனைகளுக்கு மக்கள் செல்ல பயப்படுகின்றனர். பல கிளினிக்குகள் மூடப்பட்டுள்ளன. உள்ளூர் மக்கள் கசாயம் பக்கம் திரும்பியுள்ளனர். மீண்டும் ஆயுர்வேதப் பொருட்களுக்கு தேவை அதிகரித்துள்ளது.

எல்லோரும் எக்சாமுக்கு ரெடியாக்குங்க.. செமஸ்டர் கண்டிப்பா நடக்குமாம்.. யுஜிசி திட்டவட்டமாக அறிவிப்புஎல்லோரும் எக்சாமுக்கு ரெடியாக்குங்க.. செமஸ்டர் கண்டிப்பா நடக்குமாம்.. யுஜிசி திட்டவட்டமாக அறிவிப்பு

இந்த சூழலில் மக்களிடம் இருந்து எவ்வாறு தேவை அதிகரிக்கும். இதனால்தான் கொரோனா கால கட்டத்தில் மக்களை தங்களது சிக்கலை சமாளித்துக் கொள்ள, அவர்களது வங்கிக் கணக்கில் பணம் பரிமாற்றம் செய்ய வேண்டும் என்று மன்மோகன் சிங் குறிப்பிட்டு இருந்தார். இந்தியா மட்டும்தான் பண பரிமாற்றலை ஏற்றுக் கொள்ளவில்லை, செய்யவில்லை. இதனால் வறுமை கோட்டிற்கு மேல் இருக்கும் மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

வங்கிகள்

ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா என்ன கூறுகிறதோ அதை கேட்பதற்குத்தான் வங்கிகள் தயாராக இருக்கின்றன. 2021ஆம் ஆண்டில் வங்கிகளின் வாராக்கடன் 14.7 சதவீதம் அதிகரிக்கும் என்று தெரிய வந்துள்ளது. தற்போது கடன் வாங்கும் திறன் இருப்பவர்களுக்கும் அவர்களது பேலன்ஸ் சீட்டைப் பார்த்து எந்த வங்கிகளும் கடன் கொடுக்க தயாராக இல்லை. சமீபத்தில் ரூ. 3 லட்சம் கோடி கடன் உத்தரவாத திட்டம் அறிவிக்கப்பட்டது. கடன் கட்டத் தவறியவர்களுக்கு எதிராக வங்கிகளுக்கு இந்தப் பணத்தை ரிசர்வ் வங்கி கொடுக்கும் என்று நம்பினோம். மொத்தம் ரூ. 30 கோடி வாராக்கடனில் ரூ. 3 லட்சம் கோடியாக இருக்கும் என்று நினைத்தோம். ஆனால், எங்களது நம்பிக்கை தவறாகிவிட்டது. இந்தப் பணத்தில் வெறும் 1,36,000 மட்டுமே அனுமதிக்கப்பட்டது. அதில், 87,227 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. தமிழில் ஒரு சொலவடை கூறுவார்கள். அதாவது கழுதை தேய்ந்து கட்டெறும்பானது என்று. அதுதான் தற்போது நடந்து கொண்டு இருக்கிறது.

வாங்குபவர்களிடமும் நம்பிக்கை குறைந்துள்ளது. திருப்பூர் கார்மென்ட் தொழிற்சாலை 30 சதவீத உற்பத்தி திறனை கொண்டுள்ளது. வேலை செய்பவர்களின் சதவீதம் 60 சதவீதமாக இருக்கிறது. தங்களது 20 சதவீத டீலர்சிப்பை தக்க வைத்துக் கொள்ள ஹார்டுவேர் வியாபாரிகள், சிமென்ட் டீலர்கள், யடர் டீலர்கள் தவித்து வருகின்றனர். கடன் வாங்கக் தகுதி இருப்பவர்கள் கூட தங்களால் கடனை கட்ட முடியாமல் கவலை அடைந்துள்ளனர். இவர்களிடம் பணம் இருந்தால் மட்டுமே வியாபாரம் செய்ய முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

பெரிய தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்களும் முதலீட்டை குறைத்து, பணம் இருப்பை தக்க வைத்துக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். பெரிய வணிக நிறுவனங்களும் தங்களை கடன் இல்லாத வணிக நிறுவனங்களாக மாற்றிக் கொண்டுள்ளனர்.

சர்வதேச அமைப்புகள்

சுதந்திர வர்த்தகத்துக்கு மத்திய அரசு தடை ஏற்படுத்தி இருப்பது உலக அளவில் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. சர்வதேச வர்த்தக ஒப்பந்தத்தை இந்தியா வெளிப்படையாக முறித்து அதுகுறித்து பேசி வருகிறது. இறக்குமதியில் மாற்று வழியை ஏற்படுத்துவது வளர்ச்சிக்கான அறிகுறியாக இருக்கும். அளவு கட்டுப்பாடுகள், அதிக வரி கட்டணங்கள் மற்றும் கட்டணமில்லாத தடைகள் மீண்டும் அமலுக்கு வந்துள்ளன. இதை ட்ரம்ப் எபெக்ட் ஆக பார்க்கிறேன்.

நிழலாக இருக்கும் நிறுவனங்கள்: தகவல் கமிஷன், தேர்தல் கமிஷன், நிதி ஆயோக், பிரதமர் பொருளாதார ஆலோசனை கமிஷன், தலைமை பொருளாதார ஆலோசகர் அலுவலகம், தணிக்கை அலுலவகம். இவை அனைத்தும் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளன. தொழில், முதலீடுகள், பென்ஷன் நிதி, வெல்த் பண்ட்ஸ் ஆகியவை இன்று நெகடிவ் அபிப்பிராயத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது மூன்று நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளது. மோசமான பொருளாதார மேலாண்மை, கொரோனா பரவல், சீனாவுடன் மோதி வருவது, இவை மூன்றும் இந்தியாவின் பலவீனங்களை வெளிப்படுத்தியுள்ளது. மோசமான பொருளாதார சிக்கலில் இருந்து இந்தியாவை எவ்வாறு மீட்டெடுப்பது என்பது குறித்து மன்மோகன் சிங் மற்றும் சக்ரவர்த்தி இருவரும் வழிகாட்டியுள்ளனர்'' என்று தெரிவித்துள்ளார்.

English summary
These triple crisis has exposed India’s weaknesses says P. Chidambaram in his special story
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X