டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

காஷ்மீரில் நிலைமை சரியில்லை.. டெல்லி திருப்பியனுப்பப்பட்ட ராகுல் காந்தி பரபரப்பு பேட்டி

Google Oneindia Tamil News

டெல்லி: காஷ்மீரில் நிலைமை சரியில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, அந்த மாநிலத்தில் உள்ள நிலைமையை நேரில் பார்த்து ஆய்வு செய்வதற்காக, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி தலைமையில், எதிர்க் கட்சித் தலைவர்களின் குழுவொன்று இன்று காஷ்மீர் சென்றிருந்தது.

Things not normal in Jammu Kashmir, says Rahul Gandhi

அவர்களை உள்ளே விடாமல் விமான நிலையத்திலிருந்து டெல்லிக்கு திருப்பி அனுப்பிவிட்டனர். ஸ்ரீநகர் விமான நிலையத்திலிருந்து மற்ற எதிர்க்கட்சித் தலைவர்களுடன் டெல்லி திருப்பி அனுப்பப்பட்டார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

இதுகுறித்து டெல்லி விமான நிலையத்தில் ராகுல் காந்தி கூறியதாவது: காஷ்மீர் மாநில நிர்வாகத்தின் நடவடிக்கையை வைத்து பார்க்கும்போது ஜம்மு-காஷ்மீரில் சட்டம் ஒழுங்கு நிலைமை சரியாக இல்லை என்பது நிரூபணமாகியுள்ளது.

Things not normal in Jammu Kashmir, says Rahul Gandhi

சில நாட்களுக்கு முன்பு, ஜம்மு-காஷ்மீரைப் பார்வையிட ஆளுநர் என்னை அழைத்தார். எனவே நான் அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டேன். எல்லாம் இயல்பாக இருப்பதாகவும், மாநிலத்தைப் பார்வையிட அவரே எனக்கு சிறப்பு விமானத்தை அனுப்புவார் என்றும் ஆளுநர் தெரிவித்தார்.

ஆனால் உங்கள் விமானம் தேவையில்லை, ஆனால் நான் உங்கள் அழைப்பை ஏற்றுக்கொள்கிறேன். நான் ஜம்மு-காஷ்மீருக்கு வருவேன் என்று, நான் அவரிடம் சொன்னேன்.

மக்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதற்கும், எங்களால் முடிந்தால் உதவுவதற்கும் நாங்கள் விரும்பினோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக எங்களை விமான நிலையத்திற்கு வெளியேகூட செல்ல அனுமதிக்கவில்லை. எங்களுடன் இருந்த பத்திரிகையாளர்களும் மோசமாக கையாளப்பட்டனர், தாக்கப்பட்டனர். இதை வைத்து பார்த்தால், நடந்த விஷயங்கள் சாதாரணமானவை அல்ல என்பது தெளிவாகிறது. இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.

இதனிடையே, ராகுல் காந்தியுடன் அதே விமானத்தில் பயணித்த காஷ்மீர் மக்கள் சிலர், தங்கள் நிலைமை மோசமாக இருப்பதாக முறையிடுவது போன்ற வீடியோவை காங்கிரஸ் கட்சி ட்விட்டரில் வெளியிட்டுள்ளது.

இதனிடையே "ஜம்மு காஷ்மீர் மக்களை அச்சுறுத்தலில் இருந்து பாதுகாக்க அரசு முயற்சிக்கும் நேரத்தில், அரசியல் தலைவர்கள் ஸ்ரீநகருக்கு வருகை தரக்கூடாது, ஏனெனில் அவர்கள் மற்றவர்களை சிரமத்திற்கு உள்ளாக்குவார்கள்" என்று ஜம்மு-காஷ்மீர் தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை ட்வீட் செய்துள்ளது.

English summary
We wanted to understand what people were doing and help if we could. But unfortunately we were not allowed to go outside the airport. The journalists who were with us were ill-treated and beaten. Clearly, things are not that simple. Thus said Rahul Gandhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X