டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

10% இடஒதுக்கீடு செய்ய அரசியலமைப்பில் இடமில்லை...வழக்கு தொடர்ந்தார் திருமாவளவன்

Google Oneindia Tamil News

டெல்லி: 10 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் விசிக தலைவர் திருமாவளவன் மனுதாக்கல் செய்துள்ளார்.

பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு செய்ய அரசியலமைப்பில் இடமில்லை எனவும் இடஒதுக்கீடு மசோதா, அதற்கான சட்ட திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Thirumavalavan has filed a petition in the Supreme Court against 10 percent reservation

சமூக அடிப்படையில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

இந்நிலையில் பொருளாதாரத்தில் பின் தங்கிய முற்ப்பட்ட வகுப்பினருக்கும் 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் வகையில் மத்திய அரசு சட்டம் இயற்றியுள்ளது. இதற்கு திமுக. விசிக, உள்ளிட்ட கட்சிகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும், திமுக சார்பில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

முன்னதாக, பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10% இடஒதுக்கீடு என்பது ஏமாற்றுவேலை. இடஒதுக்கீடு எந்த வகையிலும் பலனை தராது எனவும் சமூக நீதிக்கு எதிரானது என்றும் திருமாவளவன் கருத்து தெரிவித்தார்.

English summary
VCK presudent Thirumavalavan has filed a petition in the Supreme Court against 10 per cent reservation
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X