டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பணியாளர் செய்த தவறு.. டெலிட் செய்துவிட்டோம்.. திருவள்ளுவர் டிவிட் பற்றி வெங்கையா நாயுடு விளக்கம்!

காவி உடையில் திருவள்ளுவர் இருக்கும் புகைப்படத்தை பணியாளர் ஒருவர் தவறுவதாக வெளியிட்டுவிட்டார் என்று துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    காவி உடை திருவள்ளுவர் படம்.. ட்விட்டை மாற்றிய வெங்கையா நாயுடு

    டெல்லி: காவி உடையில் திருவள்ளுவர் இருக்கும் புகைப்படத்தை பணியாளர் ஒருவர் தவறுவதாக வெளியிட்டுவிட்டார் என்று துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

    கடந்த சில தினங்களுக்கு முன் தமிழக பாஜக கட்சியின் டிவிட்டர் பக்கம் திருவள்ளுவருக்கு காவி நிற உடை அணிவித்தது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. பாஜக கட்சி தனது டிவிட்டில் திருவள்ளுவருக்கு காவி உடை கொடுக்கப்பட்டு இருக்கிறது.

    இது தமிழகம் முழுக்க பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு எதிராக தமிழகம் முழுக்க அரசியல் தலைவர்கள், மக்கள் பலர் குரல் எழுப்பினார்கள். இதையடுத்து தமிழக பாஜக அந்த டிவிட்டை நீக்கியது.

    மீண்டும் என்ன

    மீண்டும் என்ன

    இந்த நிலையில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தனது டிவிட்டர் பக்கத்தில் காவி உடையுடன் திருவள்ளுவர் படத்தை பதிவிட்டார். மேலும் சிறந்த தமிழ்ப் புலவரும், தத்துவவாதியும், ஞானியுமான திருவள்ளுவரை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன். அவர் நமக்கு அளித்த திருக்குறள் இந்த உலகில் உன்னதமான வாழ்க்கையை வாழ்வதற்கு மனிதகுலத்திற்கு வழிகாட்டுகிறது, என்று குறிப்பிட்டு இருந்தார்.

    தமிழக பாஜக

    தமிழக பாஜக

    இதை தமிழக பாஜகவின் டிவிட்டர் பக்கமும் பகிர்ந்து இருந்தது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். காவி உடையுடன் திருவள்ளுவர் படத்தை பதிவிட்டதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனையடுத்து காவி உடை திருவள்ளுவர் படத்தை வெங்கையா நாயுடு நீக்கினார்.

    என்ன நீக்கம்

    என்ன நீக்கம்

    அதன்பின் அவர், திருவள்ளுவர் சாதராண வெள்ளை உடை இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்தார். இதனால் இந்த சர்ச்சை அடங்கியது. இந்த நிலையில் இது தொடர்பாக வெங்கையா நாயுடு தற்போது விளக்கம் அளித்துள்ளார். அதில், காவி உடையணிந்த திருவள்ளுவர் படத்தை பணியாளர் ஒருவர் தவறுதலாக டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவரிடம் இது தொடார்பாக விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

    டெலிட் செய்தோம்

    என்னுடைய சமூக வலைதள பக்கத்தை நிர்வகிக்கும் ஒருவர் இப்படி டிவிட் செய்துவிட்டார். அதை பார்த்ததும் நாங்கள் டெலிட் செய்துவிட்டோம், என்று குறிப்பிட்டுள்ளார். இதில் டிவிட்டை நீக்கியதற்கு பலரும் வெங்கையா நாயுடுவிற்கு நன்றி தெரிவித்து வருகிறார்கள்.

    English summary
    Thiruvalluvar tweet was posted by mistake by a staff says Vice President Venkaiah Naidu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X