• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

சுதந்திர நாடு.. யாரையும் வழிபடலாம்! கே.ஜி.எப்-2 வில் பெண் பிரதமராக மிரட்டிய ரவீனா டாண்டன் நச்

Google Oneindia Tamil News

டெல்லி: சுதந்திர நாடான இந்தியாவில் யாரும் யாரை வேண்டுமானாலும் வழிபடலாம் என கே.ஜி.எஃப் - 2 திரைப்படத்தில் பெண் பிரதமராக நடித்து அசத்திய பாலிவுட் நடிகை ரவீனா டாண்டன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் வெளியான கன்னட திரைப்படமான கே.ஜி.எஃப் - 2 ஆம் பாகம் இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவிலும் பிரம்மாண்ட வெற்றியை பெற்றுள்ளது.

அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழை பிச்சு எடுக்கும்.. இன்று எங்கெல்லாம் பெய்யும்? ரிப்போர்ட் அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழை பிச்சு எடுக்கும்.. இன்று எங்கெல்லாம் பெய்யும்? ரிப்போர்ட்

ஆயிரம் கோடி வசூலை தாண்டியும் தொடர்ந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் இந்த படத்தில் பெண் பிரதமராக நடித்த ரவீனா டாண்டனின் நடிப்புக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

அவுரங்கசீபுக்கு மரியாதை

அவுரங்கசீபுக்கு மரியாதை

ட்விட்டரில் அரசியல், சினிமா, சமூகம் சார்ந்த கருத்துக்களை துணிச்சலுடன் கூறும் சில பிரபலங்களில் ஒருவரான ரவீனா ட்விட்டரில் பதிவிட்டுள்ள கருத்துதான் தற்போது அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. தெலுங்கானாவை சேர்ந்த ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான அக்பருத்தீன் ஒவைசி மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் மாவட்டம் குல்தாபாத் பகுதியில் உள்ள முகலாய பேரரசர் அவுரங்கசீப்பின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

வலதுசாரி எழுத்தாளரின் பதிவு

வலதுசாரி எழுத்தாளரின் பதிவு

ஆங்கில செய்தி நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களுடன் பகிரப்பட்ட இந்த செய்தியை வலதுசாரி எழுத்தாளர் ஆனந்த் ரங்கநாதன் ட்விட்டரில் ரீட்வீட் செய்து தனது எதிர்ப்பை பதிவு செய்திருந்தார். அதில், "குரு தேஜ் பகதூரின் தலையை துண்டித்த, சாம்பாஜி மகாராஜின் தலையை கொய்த, காசியை இடித்த, 49 லட்சம் இந்துக்களை கொலை செய்த அசுரனுடைய கல்லறையில் பிரார்த்தனை செய்வது ஆத்திரமூட்டும் மனநோயாளியின் செயல்." என பதிவிட்டு இருந்தார்.

யாரையும் வழிபடலாம்

யாரையும் வழிபடலாம்

ஆனந்த் ரங்கநாதனின் இப்பதிவை ட்விட்டரில் ரீட்வீட் செய்து நடிகை ரவீனா டாண்டன் தனது எதிர்ப்பை பதிவு செய்து இருக்கிறார். அதில், "நாம் அனைவரும் சகிப்புத்தன்மை கொண்ட இனத்தை சேர்ந்தவர்களாக இருந்தோம், இருக்கிறோம், இருப்போம். இது சுதந்திர நாடு. நாம் விரும்பும் யாரை வேண்டுமானாலும் இங்கு வழிபட முடியும். அனைவருக்கும் சம உரிமை இருக்கிறது." என்றார்.

உரியவர்களுக்கு புரிந்துவிட்டது

உரியவர்களுக்கு புரிந்துவிட்டது

ரவீனா டாண்டனின் இக்கருத்துக்கு வலதுசாரிகள் ட்விட்டரில் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். ஒருவர் அஜ்மல் கசாப், ஒசாமா, ஹபீஸ் சயீத் போன்றவர்களை வணங்கினால் சரியா? எனக் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ரவீனா டாண்டன், "நீங்கள் குறிப்பிட்டுள்ள பெயர்களையும், ஏன் சாத்தானையும் கூட வணங்கும் சிலரை நீங்கள் பார்க்கலாம். எனது பதிவை உரியவர்கள் புரிந்துகொண்டனர்." எனக் கூறியுள்ளார்.

English summary
This is a free country. Worship anyone - KGF 2 actress Raveena Tandon: சுதந்திர நாடான இந்தியாவில் யாரும் யாரை வேண்டுமானாலும் வழிபடலாம் என கே.ஜி.எஃப் - 2 திரைப்படத்தில் பெண் பிரதமராக நடித்து அசத்திய பாலிவுட் நடிகை ரவீனா டாண்டன் தெரிவித்துள்ளார்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X