டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எப்போது என்ன செய்ய வேண்டும்.. அமித் ஷா பிளான் போட்டது இப்படித்தான்.. வெளியான முக்கிய புகைப்படம்!

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை நீக்கும் முன் உள்துறை அமைச்சர் அமித் ஷா போட்ட திட்டங்கள் குறித்த புகைப்படம் வெளியாகி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Amit Shah : எதிர்கட்சிகளை சமாளிக்க அமித் ஷா செய்த செம்ம தந்திரம்- வீடியோ

    டெல்லி: காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை நீக்கும் முன் உள்துறை அமைச்சர் அமித் ஷா போட்ட திட்டங்கள் குறித்த புகைப்படம் வெளியாகி உள்ளது. இதற்கு முன் அவர் என்ன மாதிரியான விஷயங்களை எல்லாம் செய்து, இந்த அறிவிப்பை வெளியிட்டார் என்று அந்த புகைப்படம் மூலம் தெரிய வந்துள்ளது.

    யாரும் எதிர்பார்க்காத திருப்பமாக ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு உரிமைகளை வழங்கக் கூடிய அரசியல் சாசனத்தின் 370 பிரிவை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இன்று ராஜ்யசபாவில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.

    இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன் மத்திய அரசு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து வந்தது. முக்கியமாக காஷ்மீரில் தொடர்ந்து பாதுகாப்பு படைகளை குவித்து வந்தது. காஷ்மீரை பிரிக்க போவதால் அங்கு கலவரம் ஏற்படும் என்பதால் தொடர்ந்து அங்கு இந்திய ராணுவம் படைகளை குவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

    என்ன மீட்டிங்

    என்ன மீட்டிங்

    அதேபோல் டெல்லியிலும் அமித் ஷா தலைமையில் அடிக்கடி இது தொடர்பாக மீட்டிங் நடந்தது. நேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் டெல்லியில் காலையும், மாலையும் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதேபோல் இன்று காலையில் பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது.

    புகைப்படம்

    புகைப்படம்

    இந்த நிலையில்தான் தற்போது அமித் ஷாவின் புகைப்படம் இணையம் முழுக்க வைரலாகி உள்ளது. அந்த புகைப்படத்தில் அவர் ஒரு முக்கியமான குறிப்பை கையில் வைத்து இருக்கிறார். அந்த வெள்ளை பேப்பரில் காஷ்மீரில் 370 சட்டப்பிரிவை நீக்கும் முன் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று வரிசையாக குறிப்புகள் இடம்பெற்றுள்ளது.

    என்ன அறிவிப்பு

    என்ன அறிவிப்பு

    அதன்படி முதலில் குடியரசுத் தலைவரிடம் தெரிவிக்க வேண்டும். அதன்பின் துணை குடியரசுத் தலைவரிடம் தெரிவிக்க வேண்டும். பின் கேபினேட் கூட்ட வேண்டும் என்று வரிசையாக நிறைய விஷயங்கள் உள்ளது. இதில் ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்ற குறிப்பும் அடங்கி உள்ளது.

    மோடி வருவார்

    இதில் எந்தெந்த விஷயங்களை எப்போது முடிக்க வேண்டும் என்றும் குறிப்பு உள்ளது. அதன்படி இன்று காலைக்குள் அனைத்து விதமான அறிவிப்பையும் செய்ய வேண்டும். அதே சமயம் ஆகஸ்ட் 7ம் தேதி மக்களுக்கு இது குறித்து வீடியோ மூலம் பிரதமர் மோடி அறிவிக்க வேண்டும் என்றும் அந்த புகைப்படம் மூலம் தெரிய வருகிறது.

    இப்படித்தான்

    இப்படித்தான்

    காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்படுவதற்கு பின் அமித் ஷா எப்படியெல்லாம் திட்டங்களை வகுத்து இருக்கிறார் என்று இதன் மூலம் தெரிய வந்துள்ளது.இதற்கு பின் பாஜக எப்படி எல்லாம் உழைத்து இருக்கிறது என்று இந்த ஒரு புகைப்படம் எல்லோருக்கும் உணர்த்தி உள்ளது. அதனால்தான் தற்போது இணையம் முழுக்க இது வைரலாகி வருகிறது.

    English summary
    This is how Amit Shah planned to remove Article 370: The viral Pic of today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X