டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரொம்ப மோசம்.. டிரம்ப் வருகையின் போதே டெல்லியில் கலவரம்.. கிழித்து தொங்கவிட்ட சர்வதேச மீடியாக்கள்!

அமெரிக்க அதிபர் டிரம்பின் வருகையின் போது டெல்லியில் கலவரம் நடந்தது குறித்து சர்வதேச மீடியாக்கள் கண்டனத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்திய வருகையின் போது டெல்லியில் கலவரம் நடந்தது குறித்து சர்வதேச மீடியாக்கள் கண்டனத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது. டெல்லி போராட்டம் இதனால் உலகம் முழுக்க வைரலாகி உள்ளது.

Recommended Video

    Delhi CAA Violence: A Muslim man begged for his life from rioters| உயிருக்கு போராடிய நிலையில் கெஞ்சிய இளைஞர்...

    டெல்லியில் இத்தனை நாட்கள் அமைதியாக நடந்து வந்த சிஏஏ போராட்டம் பெரிய கலவரத்தில் முடிந்துள்ளது. நேற்று மாலை தொடங்கிய கலவரத்தில் மொத்தம் 7 பேர் கொல்லப்பட்டனர். இதில் 5 பேர் இஸ்லாமியர்கள். இதில் போலீஸ் கான்டஸ்டிபிள் ஒருவரும் கொல்லப்பட்டார். போலீஸ் துணை கமிஷ்னர் ஒருவர் படுகாயம் அடைந்தனர்.

    நேற்று மாலை தொடங்கிய கலவரம் இன்னும் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் டெல்லியில் தற்போது பாராமிலிட்டரி குவிக்கப்பட்டுள்ளது.டெல்லியில் ஜப்பார்பேட், மவ்ஜ்பூர், சாந்த்பாக், குர்ஜீ காஸ், பஜன்பூரா ஆகிய பகுதிகளில் கடுமையான கலவரம் நேற்று நடந்து வருகிறது.

    அல்ஜஸீரா எப்படி

    அல்ஜஸீரா எப்படி

    அல்ஜஸீராவில், இந்த கலவரக்காரர்கள் எல்லோரும் ஜெய் ஸ்ரீ ராம் என்று கத்தினார்கள். அவர்கள் மொத்தமாக சென்று கலவரம் செய்தனர். பல வாகனங்களுக்கு தீ வைத்தனர். பாஜக தலைவர் கபில் மிஸ்ரா மக்களை தூண்டும் வகையில் பேசினார். அவர் பேசிய மறுநாளே கலவரம் நடந்துள்ளது. அமைதியாக நடந்த போராட்டம் கலவரமாக மாற இவர் முக்கிய காரணம் என்று அல்ஜஸீரா குறிப்பிட்டுள்ளது. இந்திய தலைநகர் டெல்லி இப்பொது அவ்வளவு பாதுகாப்பாக இல்லை என்று அல்ஜஸீரா எழுதியுள்ளது.

    யூஎஸ் நியூஸ் என்ன சொன்னது

    யூஎஸ் நியூஸ் என்ன சொன்னது

    அமெரிக்காவை சேர்ந்த செய்தி நிறுவனமான யூஎஸ் நியூஸ் அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வந்திருக்கும் போது இப்படி நடப்பது துரதிஷ்டவசமானது. அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவில் மதங்களுக்கு இருக்கும் சசுதந்திரம் குறித்து பேச வாய்ப்புள்ளது. இப்படி ஒரு நிலை இருக்கும் போது டெல்லியில் கலவரம் நடக்கிறது. இதை பற்றி இரண்டு தலைவர்களும் பேச வாய்ப்புள்ளது என்று எழுதியுள்ளது.

    ராய்டர்ஸ் எப்படி

    அதேபோல் பிரபல நாளிதழான ராய்டர்ஸ் சிஏஏ போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தை கடுமையாக கண்டித்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையின் போது இப்படி நடப்பது கவலையளிக்கிறது என்றுள்ளது. அதேபோல் சிஏஏ போராட்டம் பற்றி ராய்டர்ஸ் பத்திரிக்கையாளர் டேனிஷ் சித்திக் (REUTERS - Danish Siddiqui.) எடுத்த புகைப்படங்கள் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இவர் எடுத்த புகைப்படங்கள் டெல்லி கலவரத்திற்கு பெரிய ஆதாரமாக மாறியுள்ளது. முக்கியமாக இஸ்லாமிய இளைஞர் ஒருவரை சுற்றி நின்று கலவரக்காரர்கள் தாக்கும் புகைப்படமும் வைரல் ஆகியுள்ளது.

    கார்டியன் என்ன சொன்னது

    கார்டியன் என்ன சொன்னது

    ஆனால் இந்த போராட்டத்தை பிரபல கார்டியன் பத்திரிக்கை தவறாக எழுதி உள்ளது. அதில் டெல்லியில் அமெரிக்க அதிபர் டிரம்பின் வருகையை இந்திய இந்துக்கள் வரவேற்றார்கள். அவரது புகைப்படத்திற்கு மாலை போட்டு பூஜை செய்தனர். ஆனால் இந்திய கம்யூனிஸ்ட்கள் இதை எதிர்த்தனர். இதனால்தான் இரண்டு தரப்பிற்கும் சண்டை வந்தது. சிஏஏ போராட்டத்துடன் சேர்ந்து இந்த சண்டையும் நடந்தது என்று அதில் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

    பிபிசி என்ன

    பிபிசி என்ன

    பிபிசி இதை அப்படியே சம்பவ இடத்தில் இருந்து செய்தியாக்கி குறிப்பிட்டுள்ளனர். அதில், 200க்கும் அதிகமானோர் முதலில் கலவரம் செய்தனர். அவர்களின் கையில் காவி வண்ண கொடி, தேசிய கோடி இருந்தது. அவர்களில் பலர் வலதுசாரி அமைப்பை சேர்ந்தவர்கள். அவர்கள் எல்லோரும் ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிட்டு கலவரம் செய்தனர். சிலர் துரோகிகளை சுட வேண்டும் என்று கூட கூறி உள்ளது.

    இரண்டு தரப்பும்

    இரண்டு தரப்பும்

    அதிபர் டிரம்ப் டெல்லி செல்லும் போது இப்படி கலவரம் நடக்கிறது. இதனால் அந்த கலவரம் அதிக கவனம் பெற்றுள்ளது . இரண்டு தரப்பை சேர்ந்தவர்களும் இதில் மாறி மாறி தாக்கிக் கொண்டார்கள், என்று பிபிசி குறிப்பிட்டுள்ளது. உலகம் முழுக்க பல்வேறு நாட்டை சேர்ந்த செய்தி நிறுவனங்கள் டெல்லி கலவரத்தை இப்படித்தான் செய்தியாக்கி உள்ளது.

    English summary
    This is how international media reports Delhi CAA Violence While Trump visit.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X