டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இது எங்கள் உள்நாட்டு விஷயம்.. சிஏஏவிற்கு எதிரான ஐரோப்பா தீர்மானத்திற்கு மத்திய அரசு பதிலடி!

சிஏஏ சட்டத்திற்கு எதிராக ஐரோப்பிய யூனியன் நிறைவேற்ற இருக்கும் தீர்மானத்திற்கு மத்திய அரசு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Amit Shah says that they will never revoke CAA

    டெல்லி: சிஏஏ சட்டத்திற்கு எதிராக ஐரோப்பிய யூனியன் நிறைவேற்ற இருக்கும் தீர்மானத்திற்கு மத்திய அரசு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது. இது முழுக்க முழுக்க இந்தியாவின் உள்நாட்டு விஷயம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    இந்தியாவில் அமல்படுத்தப்பட்டு இருக்கும் சிஏஏ சட்டம் காரணமாக பல லட்சம் மக்கள் நாட்டை இழந்து அகதிகளாக மாறும் நிலை ஏற்படலாம் என்று ஐரோப்பிய யூனியனை சேர்ந்த 600 எம்பிக்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் 6 முக்கிய அம்சங்களை கொண்ட தீர்மானம் நிறைவேற்ற உள்ளனர்.

    இந்த தீர்மானத்தின் நகல் தற்போது வெளியாகி உள்ளது. ஐந்து பக்கங்களை கொண்ட அந்த தீர்மானத்தில், இந்தியாவில் கொண்டு வரப்பட்டுள்ள சிஏஏ அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. இதனால் பல லட்சம் நாடுகளை இழக்கும் மோசமான நிலை ஏற்படும், என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்தியாவின் சிஏஏ அபாயகரமானது.. பாரபட்சமானது.. ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றம் அதிரடி தீர்மானம் இந்தியாவின் சிஏஏ அபாயகரமானது.. பாரபட்சமானது.. ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றம் அதிரடி தீர்மானம்

    அரசு

    அரசு

    இந்த நிலையில் மத்திய அரசு இதற்கு கண்டனம் தெரிவிக்கும் முடிவை எடுத்துள்ளது. இது தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு மத்திய அரசிடம் இருந்து ஐரோப்பிய யூனியனுக்கு அனுப்பப்படும். இந்த அறிக்கையில் மத்திய அரசு, ஐரோப்பிய யூனியனை கடுமையாக கண்டிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக மத்திய அரசின் வெளியுறவுத்துறை அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர். அதில், சிஏஏ என்பது இந்தியாவில் கொண்டு வரப்பட்ட சட்ட திருத்தம் .

    தேர்வு எப்படி

    தேர்வு எப்படி

    இது இந்தியாவில் எப்படி குடிமகன்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு எப்படி குடியுரிமை அளிக்கப்படும் என்பதை நிர்ணயிக்கும் சட்டம். இது முழுக்க முழுக்க இந்தியாவின் சட்டம். இது இந்தியாவின் தனிப்பட்ட விஷயம். உள்நாட்டு விஷயத்தில் ஐரோப்பிய யூனியன் அல்லது வேறு எந்த நாடும் தலையிட முடியாது. இதை ஐரோப்பிய யூனியனில் தீர்மானம் தாக்கல் செய்ய இருக்கும் எம்பிக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

    அரசு முடிவு

    அரசு முடிவு

    மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுதான் இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளது. பெரும்பான்மை எம்பிக்கள் இதற்கு ஆதரவாக வாக்களித்தனர். அதன்பின் குடியரசுத் தலைவர் ஒப்புடைத்தலுடன் இது சட்டமாகி உள்ளது. இதில் எங்கும் சட்ட வரையறையை இந்தியா மீறவில்லை. இந்தியாவில் அரசியலமைப்பிற்கு கட்டுப்பட்டுதான் இந்த சட்டத்தை நிறைவேற்றி இருக்கிறோம். ஐரோப்பிய யூனியன் இந்தியாவின் சட்ட நடைமுறைகளை கேள்வி கேட்க கூடாது.

    எங்கள் நிலைப்பாடு

    எங்கள் நிலைப்பாடு

    இந்த சட்டம் மத ரீதியாக யாரையும் கட்டுப்படுத்தவில்லை. இந்தியாவில் யாரும் தங்கள் குடியுரிமையை இழக்க போவதில்லை. இதனால் மூன்று நாட்டு அகதிகள் குடியுரிமை பெற போகிறார்கள். ஐரோப்பிய யூனியன் அதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஐரோப்பிய யூனியன் எம்பிக்களுக்கு அக்கறை இருந்தால் அவர்கள் இந்திய அதிகாரிகள் உடன் பேசலாம். சிஏஏ குறித்த சந்தேகங்களை அவர்கள் எங்களிடம் கேட்டு விளக்கம் பெறலாம் என்று இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    English summary
    This is our internal issue, Think again says Central Government on EU resolution against CAA.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X