டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பண மதிப்பிழப்பு நிலைமையை சொல்ல இந்த ஒரு படம்போதும்!

Google Oneindia Tamil News

டெல்லி: பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டு இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

பணமதிப்பிழப்பால், பல விவகாரங்களில் சாதனை நடந்துள்ளது, அது மறைமுகமாக நிகழ்ந்து வரும் சாதனைகள் என்று மத்தியில் ஆள்வோர்கள் கூறி வருகிறார்கள். ஆனால், எதிர்க்கட்சிகளோ, பண மதிப்பிழப்பு என்பது பேரிடர் என்று கூறி வருகின்றன.

This is the only advantage we gets from demonetization

[பண மதிப்பிழப்பு 2ஆம் ஆண்டு - அருண்ஜெட்லி அடுக்கும் காரணங்கள் இவைதான் ]

புள்ளி விவரங்களும், எதிர்க்கட்சிகள் கூற்றுக்குதான் வலிமை சேர்க்கின்றன. பண மதிப்பிழப்பால் கருப்பு பணம் முடங்கவில்லை என்பதும், புழக்கத்தில் இருந்த அதே அளவு பணம் இப்போதும் புழக்கத்தில்தான் இருக்கிறது என்பதும் ரிசர்வ் வங்கி புள்ளி விவரத்தால் நமக்கு கிடைக்கும் பாடம்.

ஆனால், பண மதிப்பிழப்பால் ஒரே ஒரு விஷயம்தான் மாறியுள்ளது. அது, பணம் நோட்டுகளின் வண்ணம்தான். பிங்க் கலர், பச்சைக்கலர் என கலர் கலராக புதிய ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதனால் இப்போதெல்லாம் எந்த நோட்டு எத்தனை ரூபாய் மதிப்புள்ளது என்பதை ஒன்றுக்கு பல முறை உன்னிப்பாக கவனித்துதான் அடுத்தவரிடமோ, வியாபாரிகளிடமோ கொடுக்க முடிகிறது. அந்த அளவுக்கு கன்ப்யூஸ் செய்துவிட்டன கலர் நோட்டுகள்.

இந்த ஒரு மீம் இதை சரியாக விளக்க போதுமானதாகும். பிரபுதேவா திரைப்பட பாடல் காட்சியொன்றில், ஹீரோயின் புடவை கலர், கலராக மாறும். ஏறத்தாழ இப்போது அதே கலர்களில்தான் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன. ஹேட்ஸ்ஆப் பிரபுதேவா.. நீங்க ஒரு தீர்க்கதரிசி!

English summary
This is the only advantage we gets from demonetization, a meme goes viral in social media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X