டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

Abhinandan: இதுதான் ஒரே வழி.. இதை செய்தால் இந்திய விமானி அபிநந்தனை மீட்டு விடலாம்!

பாகிஸ்தானில் சிறைப்பட்டு இருக்கும் இந்திய விமானப்படை விமானி அபிநந்தனை மீட்க இந்தியா கடுமையான முயற்சிகளை எடுத்து வருகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    அபிநந்தனை எப்போது விடுவிப்போம்?.. பாகிஸ்தான் பரபரப்பு விளக்கம்!- வீடியோ

    டெல்லி: பாகிஸ்தானில் சிறைப்பட்டு இருக்கும் இந்திய விமானப்படை விமானி அபிநந்தனை மீட்க இந்தியா கடுமையான முயற்சிகளை எடுத்து வருகிறது.

    இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் நேற்று பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்டார். பாகிஸ்தானின் எப்-16 விமானத்தை தனது மிக் விமானத்தில் துரத்தி சென்றவர், பாகிஸ்தான் எல்லைக்குள் தாக்கப்பட்டார். அதன்பின் சிறை பிடிக்கப்பட்டார்.

    இந்த நிலையில் இவரை இந்தியா எப்படி மீட்கப்போகிறது என்ற கேள்வி எழுந்து இருக்கிறது. இதற்கு வெற்றிகரமான ஒரு வழி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

    ஒப்பந்தம்

    ஒப்பந்தம்

    இரண்டாம் உலகப்போரை தொடர்ந்து 1949ல் உலகம் முழுக்க போர் தொடர்பான சட்டங்கள், விதிமுறைகள் கொண்டு வரப்பட்டது. அதில் ஜெனிவா மாநாடு உடன்படிக்கையும், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் விதிகளும் முக்கியமானது. போர் தொடர்பான, போருக்கு பிந்தைய நடைமுறைகள் தொடர்பான பல விதிகளை இந்த இரண்டு சட்டங்களும், ஒப்பந்தங்களும் வகுத்து இருக்கிறது.

    இந்திய விமானி அபிநந்தனை எப்போது விடுவிப்போம்?.. பாகிஸ்தான் பரபரப்பு விளக்கம்! இந்திய விமானி அபிநந்தனை எப்போது விடுவிப்போம்?.. பாகிஸ்தான் பரபரப்பு விளக்கம்!

    முக்கியமாக கைதிகள்

    முக்கியமாக கைதிகள்

    முக்கியமாக எதிரி நாட்டில் சிறைப்பட்டு இருக்கும் போர் கைதிகள் எப்படி நடத்தப்பட வேண்டும். அவர்களுக்கு எப்படிப்பட்ட மரியாதையை அளிக்க வேண்டும். அவர்களை எப்போது விடுதலை செய்ய வேண்டும். அவர்களை எப்படி விசாரிக்க வேண்டும். போருக்கு பின் போர் கைதிகளை என்ன செய்ய வேண்டும் என்று நிறைய விதிகள் இதில் வகுக்கப்பட்டுள்ளது.

    என்ன விதிகள்

    என்ன விதிகள்

    அதில் இருக்கும் முக்கிய விதிகள் என்று பார்த்தால்,

    1. போர் கைதிகள் எதிரி நாட்டில் கண்ணியமுடன் நடத்தப்பட வேண்டும். அவருக்கு அனைத்து விதமான அடிப்படை உரிமைகளையும் அளிக்க வேண்டும்.

    2. போர் கைதிகளை துன்புறுத்த கூடாது.

    3. போர் ரகசியம், ராணுவ ரகசியம், தளவாட விவரங்களை கேட்க கூடாது.

    4. காயம்பட்ட போர் கைதிகளை முறையாக சிகிச்சை பெற வைத்து பாதுகாக்க வேண்டும்.

    5. சர்வதேச விதிகளின்படி மட்டுமே கைதிகளை விசாரிக்க வேண்டும்.

    6. போர் கைதியின் பதவி என்னவோ அதை பொறுத்து அதிக மரியாதையை அளிக்க வேண்டும்.

    7. முக்கியமாக போர் முடிந்ததும் கைதிகளை விடுவிக்க வேண்டும்.

     இப்போது என்ன

    இப்போது என்ன

    பாகிஸ்தான் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருக்கிறது. இந்தியாவும் இதில் கையெழுத்திட்டுள்ளது. இதனால்தான் தற்போது பாகிஸ்தானில் அபிநந்தன் கண்ணியமுடன் நடத்தப்பட்டு வருகிறார். அவர் பதில் அளிக்க முடியாது என்ற கேள்விகளை, பாகிஸ்தான் மீண்டும் கேட்காததற்கு இதுவே காரணம். இதனால்தான் அவர் தற்போது பாதுகாப்புடன் உள்ளார்.

    என்ன நடந்தது

    என்ன நடந்தது

    இதேபோல் காஷ்மீர் போரின் போது 1999ல் இந்திய வீரர் காம்பாம்பதி நச்சிகேட்டா பாகிஸ்தான் ராணுவத்திடம் மாட்டினார். அவரை போர் முடிந்த பின் இந்தியாஅனுப்பியது பாகிஸ்தான். உலக நாடுகளின் அழுத்தம் காரணமாகவும், ஜெனிவா ஒப்பந்தம் காரணமாகவும், அவர் வாகா பார்டரை கடந்து இந்தியா வந்தார்.

    ஒரே வழி

    ஒரே வழி

    இதே வழியை, இதே ஒப்பந்தத்தை பயன்படுத்திதான் தற்போது அபிநந்தனை இந்தியா மீட்க வேண்டும். இரண்டு நாடுகளுக்கு இடையில் போர் பதற்றம் நீடிக்கும் வரை அவரை பாகிஸ்தான் விடுதலை செய்ய வாய்ப்பில்லை. இதனால் போர் பதற்றம் தணிந்த பின் இந்த ஒப்பந்தத்தை கூறி, உலக நாடுகளின் அழுத்தம் மூலம் அபிநந்தனை விடுவிக்க வேண்டும்.

    [Read more: Abhinandhan: அபிநந்தனை மீட்பதற்காக ராஜாங்க ரீதியில் இந்தியா நடவடிக்கை ]

    English summary
    Geneva Convention of 1949 is the only way to repatriate IAF Pilot Abhinandan to India from Pakistan.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X