டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

2-ஆவது அடி.. முதல் தாக்குதலைவிட இது பயங்கர பேரிடி.. இனியாவது திருந்துமா பாகிஸ்தான்?

Google Oneindia Tamil News

Recommended Video

    முதல் தாக்குதலை விட பெரிய அடி கொடுத்த இந்தியா- வீடியோ

    டெல்லி: பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் இன்று அதிகாலை நடந்த வான் வழித்தாக்குதல் 2-ஆவது சர்ஜிக்கல் ஸ்டிரைக் ஆகும்.

    இந்தியாவுடன் நட்புறவு என பாகிஸ்தான் கூறிக் கொண்டாலும் நைஸாக தாக்குதல் சம்பவங்களை நடத்துவதும் எங்களுக்கும் தாக்குதலுக்கும் சம்பந்தமில்லை என கூறுவதும் பாகிஸ்தானின் வேலையாக உள்ளது.

    பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதத்தை வேரறுக்க இந்தியாவும் உலக நாடுகளும் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுத்தாலும் அதில் முற்றிலும் வெற்றி காண முடியவில்லை.

    இந்தியா வியூகம்

    இந்தியா வியூகம்

    இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி புல்வாமாவில் சிஆர்பிஎஃப் படையினர் நடத்திய தாக்குதலில் 40 வீரர்களை நாம் இழந்தோம். இதற்கு பதிலடி கொடுக்க இந்தியா வியூகம் வகுத்தது.

    அழிப்பு

    அழிப்பு

    அதன்படி இன்று அதிகாலை 3.30 மணிக்கு பாலகோட் உள்ளிட்ட சுமார் 4 தீவிரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா வான்வெளி தாக்குதல் நடத்தியது. இதில் 200 முதல் 300 தீவிரவாதிகள் அழிந்திருக்கலாம் என தகவல் கூறப்படுகிறது.

    சிறப்பு கமாண்டோ படை

    சிறப்பு கமாண்டோ படை

    இது இரண்டாவது சர்ஜிக்கல் ஸ்டிரைக் என கொண்டாடப்படுகிறது. முதல் சர்ஜிக்கல் ஸ்டிரைக் பதான்கோட் தாக்குதல் சம்பவத்துக்கு கொடுக்கப்பட்டது. கடந்த 2016-ஆம் ஆண்டு ஜனவரி 2-ஆம் தேதி பஞ்சாபில் உள்ள பதான்கோட் வான் படை நிலையத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 7 பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டனர்.

    சர்ஜிக்கல் ஸ்டிரைக்

    சர்ஜிக்கல் ஸ்டிரைக்

    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் 29-ஆம் தேதி இந்திய ராணுவத்தின் சிறப்பு கமாண்டோ படையினர் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள எல்லை கோட்டுப் பகுதிக்குள் நுழைந்து அதிரடித் தாக்குதலை நடத்தி 38 தீவிரவாதிகளை கொன்றது குறிப்பிடத்தக்கது.

    English summary
    This is the second surgical strike after Pathankot incident.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X