டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மோடி அமைச்சரவையில் அமித் ஷா.. ஸ்மிருதிக்கு முக்கிய பொறுப்பு.. ஜெட்லிக்கு கல்தா? பரபரப்பு தகவல்கள்

Google Oneindia Tamil News

டெல்லி: பாஜக தலைவர் பதவியில் இருந்து விலகி உள்துறை அமைச்சராக அமித் ஷா பதவியேற்க கூடும் என்றும் உள்துறை அமைச்சராக உள்ள ராஜ்நாத் சிங்க சபாநாயகராக பதவியேற்க கூடும் என்றும் டெல்லி வட்டாரங்களில் ஊகங்கள் அடிப்படையில் தகவல்கள் வெளியாகி உள்ளன.

நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி வரும் 30ம் தேதி இரவு 7 மணி அளவில் குடியரசுத் தலைவர் மாளிகையில் பதவியேற்கிறது. மோடி பிரதமராக பதவியேற்கும்போது, அவருடன் அமைச்சர்களும் பதவியேற்கிறார்கள்.

இந்நிலையில் யார், யார் அமைச்சர்களாக பதவியேற்க கூடும், யாருக்கு என்ன பொறுப்பு என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் டெல்லி வட்டாரங்களில் ஊகங்களாக பரவி வருகின்றன.

இடைத்தேர்தலில் வென்ற திமுக எம்எல்ஏக்கள் 13 பேரும் ஸ்டாலின் முன்னிலையில் 28ம் தேதி பதவியேற்பு இடைத்தேர்தலில் வென்ற திமுக எம்எல்ஏக்கள் 13 பேரும் ஸ்டாலின் முன்னிலையில் 28ம் தேதி பதவியேற்பு

பதவி விலகுவா?

பதவி விலகுவா?

அந்த தகவல்களை இப்போது பார்ப்போம், பாஜகவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படும் அமித்ஷாவுக்கு உள்துறை அமைச்சர் பதவி கொடுக்கப்படலாம் என தகவல்கள் வந்துள்ளன. தற்போது பாஜகவின் விதியின்படி தலைவராக உள்ளவர் அமைச்சராக பொறுப்பேற்க முடியாது எனவே அவர் பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து விலகி அமைச்சராகக்கூடும் என சொல்கிறார்கள்.

ஸ்மிருத்திக்கு முக்கியத்துவம்

ஸ்மிருத்திக்கு முக்கியத்துவம்

அதேநேரம் இப்போது உள்துறை அமைச்சராக உள்ள ராஜ்நாத் சிங்குக்கு சபாநாயகர் பொறுப்பு கொடுக்கப்படலாம் என்கிறார்கள். ராகுல் காந்தியை அமேதி தொகுதியில் வீழ்த்தி மோடியின் குட்புக்கில் இடம்பெற்றுள்ள ஸ்மிருதி இராணிக்கு இந்த முறை அதிமுக்கியத்துவம் வாய்ந்த அமைச்சர் பதவி கொடுக்கப்படலாம் என்கிறார்கள்.

ஜெட்லிக்கு ஓய்வு

ஜெட்லிக்கு ஓய்வு

நிதியமைச்சர் அருண்ஜெட்லி அடிக்கடி உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். எனவே அவருக்கு இந்தமுறை ஒய்வு அளிக்கப்படலாம் என்றும் சொல்கிறார்கள்.

புதுமுகங்களுக்கு வாய்ப்பு

புதுமுகங்களுக்கு வாய்ப்பு

இந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹரியானா, மகாராஷ்டிரா மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இதனால் இந்த மாநிலத்து நிர்வாகிகளை திருப்திப்படுத்தும் வகையில் அமைச்சர்வையில் முக்கியத்துவம் கொடுக்கப்படலாம் என்கிறார்கள். இதேபோல் மூத்த தலைவர்களுக்க பதில் வயது குறைந்த புதுமுகங்களுக்கு இந்த முறை அமைச்சரவையில் அதிக இடம் ஒதுக்கப்படலாம் என்கிறார்கள். மற்றபடி பழைய அமைச்சர்வையில் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் அப்படியே தொடரவும் வாய்ப்பு உள்ளது.

English summary
this may Narendra Modiங's new Cabinet ministers list, amith shah as home minister?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X