டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தோல்விக்கு பலர் பொறுப்பேற்க வேண்டியுள்ளது.. ராஜினாமா ஏன்? ராகுல் காந்தி பரபரப்பு விளக்கம்

Google Oneindia Tamil News

Recommended Video

    Rahul gandhi resigns: காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ராகுல் காந்தி- வீடியோ

    டெல்லி: லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்த நிலையில் அந்த கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் நீண்ட விளக்கம் அளித்துள்ளார்.

    நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோற்றுப்போனதற்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்து அறிவித்தார்.

    இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தது ஏன் என்பது குறித்து டுவிட்டரில் நீண்ட விளக்கமும் ராகுல் காந்தி அளித்துள்ளார். அதில் அவர், காங்கிரஸ் கட்சியின் செயல்களும் , லட்சியங்களும் நமது அழகான தேசத்தின் உயிர்நாடிய விளக்கிய நிலையில், அதற்காக சேவை செய்வது பாக்கியம். இந்த வாய்ப்பை வழங்கிய நாட்டிற்கும், எனது கட்சிக்கும் கடமைபட்டு இருக்கிறேன்.

    ராகுல் காந்தி விளக்கம்

    ராகுல் காந்தி விளக்கம்

    2019ம் ஆண்டு லோக்சபா தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன். எங்கள் கட்சியின் எதிர்கால வளரச்சிக்கு பொறுப்புடைமை என்பது முக்கியமானது. எனவே இந்த காரணத்தால் தான் நான் ராஜினாமா செய்துள்ளேன்.

    புதிய தலைவர் தேர்வு

    புதிய தலைவர் தேர்வு

    என்னுடன் பணியாற்றி வரும் காங்கிரஸ் நிர்வாகிகள், அடுத்த காங்கிரஸ் தலைவரை பரிந்துரைக்குமாறு என்னிடம் கேட்டார்கள். ஆனால் கட்சியை அடுத்து வழிநடத்தும் புதிய தலைவரை நான் தேர்ந்தெடுப்பது சரியாக இருக்காது.

    கடினமான நடவடிக்கைகள்

    கடினமான நடவடிக்கைகள்

    காங்கிரஸ் கட்சியை மறுசீரமைக்க கடினமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டியுள்ளது. தேர்தல் தோல்விக்கு மேலும் பலர் பொறுப்பேற்க வேண்டியுள்ளது. எதிர்கால காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு எனது ராஜினாமா முக்கிய பங்காற்றும் என கருதுகிறேன். காங்கிரஸ் காரிய கமிட்டிக்குழு புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்" இவ்வாறு தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    தலைவர்கள் சமதானம்

    தலைவர்கள் சமதானம்

    முன்னதாக லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியான உடனேயே காங்கிரசின் தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக பகிரங்கமாக அறிவித்தார். அவரை சமாதானம் செய்ய காங்கிரஸ் தலைவர்கள் முயன்றனர். எனினும் அந்த முயற்சி பலன் அளிக்கவில்லை.

    காங்.தலைவர் அல்ல

    இப்போது ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் இருந்து காங்கிரஸ் தலைவர் என்ற அடையாளத்தை எடுத்துவிட்டு, காங்கிரஸ் உறுப்பினர் என மாற்றி உள்ளார். சாதாரண தொண்டனாக மாறி சேவை ஆற்றும் முடிவுக்கு ராகுல் வந்துவிட்டதை காங்கிரசில் உள்ள பலராலும் தற்போது தாங்கி கொள்ள முடியவில்லை

    English summary
    Rahul Gandhi said the Congress Working Committee will decide our new president, I am responsible for the loss of the 2019 election so resigned as Congress president
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X