டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எங்களுடன் மோதினால் யாராக இருந்தாலும் அழிவு நிச்சயம்-அருணாச்சலில் முப்படை தளபதி பிபின் ராவத் வார்னிங்

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியா பாதுகாப்பு படையுடன் மோதும் யாராக இருந்தாலும் அவர்கள் அழிக்கப்படுவார்கள் என்று முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முன்னாள் ராணுவப் படைத் தளபதியான பிபின் ராவத்த கடந்தாண்டு ஜனவரி 1ஆம் தேதி நாட்டின் முதல் முப்படை தலைமைத் தளபதியாகப் பொறுப் பெற்றுக்கொண்டார்.

தலைமைத் தளபதியாகப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், அவர் அருணாச்சல பிரதேசத்திலுள்ள இந்திய ராணுவத்தின் தளங்களை இரண்டு நாள் பயணமாக பார்வையிட்டு வருகிறார்.

Those fighting the Indian defence forces will be destroyed says Chief of Defence Staff Bipin Rawat

இரண்டாவது நாளான இன்று அருணாச்சல பிரதேசத்தில் சுபன்சிரி பள்ளத்தாக்கில் ராணுவம் மற்றும் இந்தோ திபத் காவல் துறையினர் இருக்கும் பகுதிகளை அவர் பார்வையிட்டார். அப்போது உள்நாட்டுத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி புதுமையான கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக ராணுவ வீரர்களை பிபின் ராவத் பாராட்டினார்.

எந்தவொரு சவாலையும் எப்போது வேண்டுமானாலும் எதிர்கொள்ளத் தயார் நிலையில் பாதுகாப்புப் படையினர் இருப்பதாகவும் அவர் பாராட்டினார்.

கேரளாவில்... நெஞ்சை உறைய வைக்கும் விபத்து... வீட்டின் மீது பேருந்து பாய்ந்து 7 பேர் பலி!கேரளாவில்... நெஞ்சை உறைய வைக்கும் விபத்து... வீட்டின் மீது பேருந்து பாய்ந்து 7 பேர் பலி!

அங்குள்ள ராணுவம் மற்றும் இந்தோ திபத் போலீசாருடன் கலந்துரையாடிய அவர், "நமது வீரர்களின் உயர்ந்த மன உறுதியையும் உந்துதலையும் பார்த்த பிறகு, நமது பாதுகாப்புப் படைகளுடன் மோதுபவர்கள் அழிக்கப்படுவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்" என்றார்.

அருணாச்சல பிரதேசத்தில் இரண்டு நாள் பயணம் மேற்கொண்ட அவர், இன்று இரவு மீண்டும் டெல்லி திரும்புகிறார்.

English summary
On Sunday, while visiting forward air bases in Eastern Sector including Arunachal Pradesh and Assam, Rawat said he was confident that those fighting the Indian defence forces would be destroyed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X