• search
டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

பிரான்சில் இருந்து மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள் இன்று மாலை இந்தியா வருகின்றன

Google Oneindia Tamil News

டெல்லி: பிரான்சில் இருந்து மேலு 3 ரஃபேல் போர் விமானங்கள் இன்று மாலை இந்தியாவுக்கு வருகின்றன.

பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவதற்காக 2016-ல் ஒப்பந்தம் போடப்பட்டது. மொத்தம் ரூ59,000 கோடி மதிப்பிலானது இந்த ஒப்பந்தம்.

Three more Rafale jets to arrive in India today

முதல் கட்டமாக 5 ரஃபேல் போர் விமானங்கள் கடந்த ஜூலை 28-ல் இந்தியா வந்து சேர்ந்தன. பின்னர் முறைப்படி இந்த விமானங்கள் செப்டம்பர் 10-ந் தேதி நாட்டின் விமானப் படையில் இணைக்கப்பட்டன.

லடாக் கிழக்கு எல்லையில் சீனாவின் ஊடுருவல் முயற்சிகள் தொடரும் நிலையில் அப்பகுதியில் ரஃபேல் போர் விமானங்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றன.

இந்தியாவுடன் கை கோர்க்கும் 3 நாடுகள்.. இன்று துவங்குகிறது மலபார் பயிற்சி.. செம டென்ஷனில் சீனாஇந்தியாவுடன் கை கோர்க்கும் 3 நாடுகள்.. இன்று துவங்குகிறது மலபார் பயிற்சி.. செம டென்ஷனில் சீனா

இதனைத் தொடர்ந்து பிரான்ஸில் இருந்து இன்று காலை மேலும் 3 விமானங்கள் இந்தியாவுக்கு புறப்படுகின்றன. பிரான்ஸ் நாட்டில் இருந்து 8 மணிநேரம் தொடர்ந்து பயணித்து இந்தியாவுக்கு இந்த விமானங்கள் வருகை தருகின்றன. ஹரியானாவின் அம்பாலா விமான தளத்தை இன்று மாலை இந்த விமானங்கள் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய 3 விமானங்களும் மேற்கு வங்க மாநிலம் ஹசிம்மரா விமான படைதளத்தில் நிறுத்தப்படலாம் என தெரிகிறது.

English summary
Three more Rafale jets from France to arrive in India today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X