டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இது லிஸ்ட்லேயே இல்லையே.. இந்தியாவில் TikTokஐ கொண்டு வர செம பிளான்.. அம்பானி உதவியை நாடும் பைட்டான்ஸ்

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் டிக்டாக் செயலியை மீண்டும் கொண்டு வருவதற்கு வசதியாக, பைட் டான்ஸ் நிறுவனம் ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் நிறுவனத்துடன் ஆலோசனை செய்து வருகிறது.

Recommended Video

    மீண்டும் TikTok | Ambani's Reliance உதவியை நாடும் Byte Dance | Oneindia Tamil

    சீனாவுடன் மோதல் நிலவி வந்த நிலையில் இந்தியா சீனாவின் 59 ஆப்களை முதலில் தடை செய்தது. அதை தொடர்ந்து மேலும் 50+ ஆப்கள் தடை செய்யப்பட்டது. இந்தியாவின் டேட்டாக்களை சீனா திருடுவதை தடுக்கும் வகையில் இந்தியா இந்த தடையை செய்தது.

    இந்தியாவின் இந்த முடிவு மற்ற நாடுகளுக்கு உதாரணமாக மாறியுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் சீனாவின் செயலியை தடை செய்ய தீவிரமாக முயன்று வருகிறது.

    கொரோனா பரவல்.. தமிழகம் முழுக்க சுதந்திர தின கிராமசபைக் கூட்டம் ரத்து.. தமிழக அரசு அறிவிப்பு! கொரோனா பரவல்.. தமிழகம் முழுக்க சுதந்திர தின கிராமசபைக் கூட்டம் ரத்து.. தமிழக அரசு அறிவிப்பு!

    டிரம்ப் என்ன சொன்னார்

    டிரம்ப் என்ன சொன்னார்

    டிக்டாக் செயலிக்கு தடை விதிக்க அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது. இது தொடர்பாக விரைவில் முக்கியமான அறிவிப்பு வெளியாகும் என்று கூறுகிறார்கள். அந்நாட்டு அதிபர் டிரம்ப் இந்த செயலி உடன் யாரும் வர்த்தக ரீதியான பரிவர்த்தனை மேற்கொள்ள கூடாது என்று கூறியுள்ளார். அதேபோல் டிக்டாக் நிறுவனத்தின் தலைமை நிறுவனமான பைட் டான்ஸ் நிறுவனம் உடனும் பரிவத்தனை மேற்கொள்ள கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்.

    என்ன உத்தரவு

    என்ன உத்தரவு

    இதனால் தற்போது டிக்டாக் நிறுவனம் தனது அமெரிக்க பங்குகளை விற்க முயன்று வருகிறது. உலகம் முழுக்க டிக்டாக் நிறுவனம் சீனாவின் கீழ் இயங்கினாலும், அமெரிக்காவில் மட்டும் வேறு ஒரு நிறுவனத்தின் கீழ் இயங்கும். அமெரிக்காவில் இந்த நிறுவனத்தை வேறு நிறுவனம் கட்டுப்படுத்த வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.இதனால் டிக்டாக் நிறுவனர் ஷாங் யிமிங் தனது பங்குகளை விற்க முடிவு செய்துள்ளார்.

    இருவர்

    இருவர்

    அதன்படி அமெரிக்காவில் மைக்ரோசாப்ட் நிறுவனம் உடன் இதற்காக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. டிக்டாக் நிறுவனர் ஷாங் யிமிங் தனது பங்குகளை மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு விற்க ஆலோசனை செய்து வருகிறார். அதேபோல் இன்னொரு பக்கம் டிவிட்டர் நிறுவனத்துடனும் டிக்டாக் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அமெரிக்காவில் டிக்டாக் நிறுவனம் டிவிட்டர் அல்லது மைக்ரோசாப்ட் மூலம் வாங்கப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

    ஏன் இப்படி

    ஏன் இப்படி

    அமெரிக்காவிற்கு நிறுவனத்தை மாற்றினால்தான் உலக நாடுகள் நம்மை நம்பும். அமெரிக்க நிறுவனம் போல இதை மாற்று வேண்டும். சீனாவில் இருந்து மொத்தமாக டிக்டாக் நிறுவனத்தை நாம் வெளியேற்ற வேண்டும் என்று டிக்டாக் திட்டமிட்டு வருகிறது. வருவாயை கருத்தில் கொண்டு தற்போது டிக்டாக் நிறுவனம் கைமாறும் நிலைக்கு சென்றுள்ளது.

    இந்தியா எப்படி

    இந்தியா எப்படி

    இந்த நிலையில் இந்தியாவிலும் டிக்டாக் செயலியை மீண்டும் கொண்டு வருவதற்கு வசதியாக, பைட் டான்ஸ் நிறுவனம் ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் நிறுவனத்துடன் ஆலோசனை செய்து வருகிறது. இந்தியாவில் டிக்டாக் செயலியை ரிலையன்ஸ் நிறுவனம் வாங்கி கொள்ள வேண்டும் என்று முகேஷ் அம்பானியிடம் டிக்டாக் நிறுவனம் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. முதல்கட்ட ஆலோசனைகள் முடிந்துள்ளது.

    முடிவு இல்லை

    முடிவு இல்லை

    இதற்காக அடுத்தகட்டமாக பேச்சுவார்த்தை தற்போது நடந்து கொண்டு இருக்கிறது. டிக்டாக் செயலியை ரிலையன்ஸ் வாங்கி, முதலீடு செய்தால் அதன் மீதான தடை நீங்கும் என்று பைட்டான்ஸ் நிறுவனம் நினைக்கிறது. இதற்கான முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை. விரைவில் இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என்று கூறுகிறார்கள்.ரிலையன்ஸ் ஜியோவில் உலகின் பெரிய நிறுவனங்கள் முதலீடு செய்துள்ள நிலையில், தற்போது ரிலையன்ஸ் நிறுவனம் டிக்டாக்கில் கால் பதிக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

    English summary
    TikTok ByteDance in Talks with Ambani's Reliance to sale its shares in India.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X