டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சீனாவே வேண்டாம்.. இடம் மாறும் டிக்டாக்.. திரும்பவும் வர வாய்ப்பிருக்கா? திடீர் திருப்பம்!

Google Oneindia Tamil News

டெல்லி: சீன நிறுவனமான டிக்டாக் அமெரிக்க நிறுவனமான உருமாற திட்டமிட்டுள்ளது. இதனால் மீண்டும் இந்தியாவிற்கு டிக் டாக் வருமா என்ற பரபரப்பு எழுந்துள்ளது

பைட்டான்ஸுக்குச் சொந்தமான பிரபலமான டிக் டாக் ஆப்பிற்கு இந்தியாவில் மிகப்பெரிய சந்தையாக இருந்தது என்பது ஊரறிந்த உண்மை.

கடந்த மாத இறுதியில், லடாக்கில் எல்லை பிரச்சனைக்கு பிறகு டிக் டாக் ஆப்பிற்கு இந்தியா தடை விதித்தது. இந்தியாவைப் போல் பல்வேறு நாடுகளிலும், டிக் டாக் நிறுவனத்திற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

உதறிய சச்சின்... சமாதானம் செய்த ராகுல் பிரியங்கா... நோட்டீஸ் அனுப்பிய ராஜஸ்தான் போலீஸ்!!உதறிய சச்சின்... சமாதானம் செய்த ராகுல் பிரியங்கா... நோட்டீஸ் அனுப்பிய ராஜஸ்தான் போலீஸ்!!

அமோசான் தடை

அமோசான் தடை

டிக் டாக் ஆப்பிற்கு தடை விதிப்பது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோல், அமேசான் நிறுவனமும் தங்கள் ஊழியர்கள் டிக் டாக் ஆப் பயன்படுத்த ‘தடைசெய்தது' என்று தெரிவிக்கப்பட்டது, ஆனால் பின்னாளில் அமேசான் அதை திரும்ப பெற்றுக் கொண்டது.

சீன தொடர்பு

சீன தொடர்பு

பைட் டான்ஸ் மீண்டும் இந்தியாவிற்கு ‘மறுபிரவேசம்' செய்ய பல நகர்வுகளை மேற்கொண்டு வருகிறது. . ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, டிக் டாக் ஆப்பிற்கான பயன்பாட்டைத் தடைசெய்வது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருவதாக செய்தி வந்ததிலிருந்து, அந்நிறுவனம் சீனாவி உடனான தனது தொடர்பை ‘துண்டிக்க' முயன்று வருகிறது.

வேறு நாட்டுக்கு மாறுகிறது

வேறு நாட்டுக்கு மாறுகிறது

கார்ப்பரேட் மறுசீரமைப்பு செய்வதே பைட் டான்ஸின் முக்கியமான நிகழ்ச்சி நிரல்களில் ஒன்றாகி உள்ளது. டி, டிக் டாக் நிறுவனம் தனது புதிய தலைமையகத்தை சீனாவை விட்டு வேறு இடத்திற்கு மாற்ற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுறிது. அதாவது சீனாவை விட்டுவிட்டு வேறு நாட்டு நிறுவனமாக மாற முயற்சித்து வருகிறது.

மும்பையில் உள்ளது

மும்பையில் உள்ளது

தற்போதைய நிலவரப்படி, டிக் டாக் நிறுவனத்திற்கு சீனாவிற்கு வெளியே உலகம் முழுவதும் ஐந்து முக்கிய அலுவலகங்கள் உள்ளன, அவை முறையே லண்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க், டப்ளின் மற்றும் மும்பையில் உள்ளன. இந்த ஐந்து நகரங்களில் ஒன்றில் டிக் டாக்கின் புதிய தலைமையகம் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

COO என பெயர்

COO என பெயர்

டிக் டாக் சமீபத்தில் ஒரு புதிய தலைமை நிர்வாக அதிகாரியை நியமித்தது. அத்துடன். டிக்டாக்கின் தலைமை நிர்வாக அதிகாரியாக தற்போது பதவியேற்றவர் உலக புகழ் பெற்ற டிஸ்னி நிறுவனததிற்கு தலைமை தாங்கிய கெவின் மேயர் ஆவார். பைட் டான்ஸுக்கு COO என்று பெயர் வைக்க திட்டமிட்டுளளார்.

அமெரிக்க நிறுவமான மாறுகிறது

அமெரிக்க நிறுவமான மாறுகிறது

இரு நாடுகளும் எல்லையில் இராணுவ பதட்டங்களை ஏற்படுத்தியதை அடுத்து சீனாவின் டிக் டாக் ஆப்பிற்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுளளது.. டிக்டாக்கின் யோசனை என்னவென்றால், அதன் சீன உருவத்தையும், சீன அரசாங்கத்துடன் எந்தவொரு தொடர்பும் இல்லை என்று திட்டமிடுவது தான். உண்மையில், டிக்டாக் இப்போது சீனாவில் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதன் முக்கிய சேவையகங்கள எல்லாம் அமெரிக்காவில் உள்ளன. டிக்டாக் ஒரு சீன நிறுவனமாக இருப்பதை விட ஒரு அமெரிக்க நிறுவனமாக இருக்க விரும்புகிறது. மேயரின் நியமனம் அந்த திசையில் ஒரு பெரிய படியாக கருதப்படுகிறது, இப்போது புதிய தலைமையகத்தை அமைப்பது அதன் சீன தொடர்பைக் குறைப்பதற்கான மற்றொரு நடவடிக்கையாக இருக்கலாம். எனவே அமெரிக்க நிறுவனமான உருமாறி மீண்டும் டிக்டாக் இந்தியாவிற்கு வருமா என்ற பரபரப்பு எழுந்துள்ளது.

English summary
TikTok has been looking to ‘disconnect’ from China. . The idea for TikTok is to shed its Chinese image and project that it does not have any ties with the Chinese government as such.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X