டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"கம்பேக்" தர பிளான்.. இந்தியாவிற்குள் மீண்டும் நுழைய டிக்டாக் களமிறக்கும் திட்டம்.. என்ன நடக்கும்?

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் மீண்டும் டிக்டாக் செயலியை பயன்பாட்டிற்கு கொண்டு வர அந்த நிறுவனம் மிக தீவிரமாக முயன்று வருகிறது.

டிக்டாக் - TikTok, ஷேர் இட்- Shareit, யுசி பிரவுசர் - UC Browser, ஹெலோ - Helo, எம்ஐ கம்யூனிட்டி - Mi Community, செண்டர் - Xender உள்ளிட்ட 59 செயலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டு இருக்கிறது. தடை செய்யப்பட அனைத்து செயலிகளும் சீனாவை சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.

சீனாவுடன் சண்டை நிலவி வரும் நிலையில் இப்படி சீனாவின் செயலிகள் தடை செய்யப்பட்டுள்ளது. சீனாவிற்கு எதிரான இந்தியாவின் ஸ்மார்ட் மூவ் இது என்று கூறுகிறார்கள்.

ரபேலை துரிதமாக களமிறக்க முடிவு.. லடாக்கில் வேகம் காட்டும் இந்திய விமானப்படை.. மாஸ்டர் பிளான் ரெடி!ரபேலை துரிதமாக களமிறக்க முடிவு.. லடாக்கில் வேகம் காட்டும் இந்திய விமானப்படை.. மாஸ்டர் பிளான் ரெடி!

தடை காரணம்

தடை காரணம்

இப்படி டிக்டாக்கை தடை செய்ய சொல்லப்பட்ட காரணங்களில் முக்கியமான காரணமாக கூறப்பட்டது அதன் தகவல் திருட்டு. அதாவது டிக்டாக் பயனாளர்களின் தகவல்களை திருடுகிறது. அதை சீனாவின் அரசுடன் பகிர்ந்து கொள்கிறது. மக்களின் ரகசிய விவரங்கள், தகவல்கள் திருடப்படுகிறது என்று கூறப்பட்டது. இதுவும் கூட டிக்டாக்கை தடை செய்ய மிக முக்கியமான காரணமாக பார்க்கப்பட்டது.

என்ன முயற்சி

என்ன முயற்சி

இந்த நிலையில் தன் மீது சுமத்தப்பட்ட களங்கத்தை துடைக்க டிக்டாக் முடிவு செய்துள்ளது. இதனால் சீனாவிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள டிக்டாக் முடிவு செய்து இருக்கிறது. அதன்படி டிக்டாக் தனது தலைமை நிறுவனத்தை சீனாவில் இருந்து இடமாற்றம் செய்ய முடிவு செய்துள்ளது. சீனாவில் இருந்து மொத்தமாக வெளியேறும் எண்ணத்தில் டிக்டாக் உள்ளது.

அமெரிக்கா முடிவு

அமெரிக்கா முடிவு

இதனால் இரண்டு நாடுகளை டிக்டாக் கருத்தில் கொண்டுள்ளது. அமெரிக்காவிற்கு இடம் மாற டிக்டாக் ஆலோசனை செய்து வருகிறது. கலிபோர்னியாவில் தலைமையகத்தை மாற்ற டிக்டாக் முடிவு செய்துள்ளது. இதற்காக கலிபோர்னியா கவர்னர் உடன் டிக்டாக் பேசி வருகிறது. அமெரிக்காவில் விரைவில் டிக்டாக் தடை செய்யப்பட வாய்ப்புள்ளது என்கிறீர்கள். அதை தடுக்கும் பொருட்டு அமெரிக்காவிற்கு மாற டிக்டாக் முடிவு செய்துள்ளது.

இன்னொரு இடம்

இன்னொரு இடம்

அமெரிக்கா இல்லை என்றால் இங்கிலாந்திற்கு இடம்மாற டிக்டாக் முடிவு செய்துள்ளது. லண்டனில் தலைமையகத்தை அமைக்க டிக்டாக் ஆலோசனை செய்து வருகிறது. இது தொடர்பாக டிக்டாக் அங்கு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. முக்கியமாக சீன ஊழியர்கள் யாரும் இன்றி, அமெரிக்கா அல்லது லண்டன் விதிகளுக்கு கட்டுப்பட்டு பணிகளை செய்வோம் என்று டிக்டாக் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

Recommended Video

    TikTok தலைமை அலுவலகத்தை சீனாவில் இருந்து மாற்ற முடிவு?
    இந்தியாவில் வர திட்டம்

    இந்தியாவில் வர திட்டம்

    டிக்டாக்கிற்கு உலகிலேயே இந்தியாவில்தான் அதிக பயனாளர்கள் உள்ளனர். இதனால் இந்தியாவிற்கு மீண்டும் வருவதன் மூலம் தனது வருமானத்தை மீண்டும் பழையபடி பெறலாம் . இழப்பை ஈடுகட்டலாம் என்று டிக்டாக் நினைக்கிறது. மீண்டும் மத்திய அரசின் நம்பிக்கையை பெறும் வகையில் டிக்டாக் தனது தலைமையகத்தை இந்தியாவின் நட்பு நாடுகளான இங்கிலாந்து அல்லது அமெரிக்காவிற்கு மாற்ற அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

    English summary
    TikTok may change its head office to England or The USA soon.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X