டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

போலீஸ் தடியடி முதல் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வரை... விவசாயிகள் போராட்டம் கடந்து வந்த பாதை!

Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை செயல்படுத்த இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

விவசாயிகள் போராட்டம்

விவசாயிகள் போராட்டம்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு அவர்களுடன் 8 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் எந்த பேச்சுவார்த்தையிலும் இதுவரை முடிவு எட்டப்படவில்லை.அனைத்தும் தோல்வியில் முடிந்தது.

உச்சநீதிமன்றம் உத்தரவு

உச்சநீதிமன்றம் உத்தரவு

விவசாயிகளுக்கு இந்தியாவின் பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன. வெளிநாட்டில் இருந்தும் ஆதரவு குரல் எழுந்து வருகிறது. இந்த நிலையில் 3 வேளாண் சட்டங்களை செயல்படுத்த இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

கடந்து வந்த பாதை

கடந்து வந்த பாதை

டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டம் கடந்து வந்த பாதையை கீழே காணலாம்.
ஜூன் 5: மூன்று வேளாண் மசோதாக்கள் தொடர்பாக மத்திய அரசு அறிவிப்பு
ஜூன் 14: மத்திய அரசின் அறிவிப்பை எதிர்த்து பாரதிய கிசான் யூனியன் விவசாய சங்கம் அறிக்கை
ஜூன் 14 முதல் 30 வரை: வேளாண் மசோதாக்களை எதிர்த்து பஞ்சாபில் சில விவசாயிகள் ஆர்ப்பாட்டங்களை துவக்குகிறார்கள்.
செப்.17: வேளாண் மசோதாக்களை எதிர்த்து பா,ஜ,க,வின் கூட்டணியான ஷிரோமணி அகாலிதளத்தை சேர்ந்த மத்திய உணவு பதப்படுத்தும் அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் ராஜினாமா.
செப்.27: விவசாயிகள் ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 3 மசோதாக்களுக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்.

ரெயில் மறியல் போராட்டம்

ரெயில் மறியல் போராட்டம்

செப்.24: பஞ்சாபில் விவசாயிகள் 3 நாள் 'ரெயில் மறியல் போராட்டம் தொடக்கம்.
நவம்பர் 3: நாடு தழுவிய போராட்டத்துக்கு விவசாயிகள் அழைப்பு
நவம்பர் 25: பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணி
நவம்பர் 27: ஹரியானா, டெல்லியில் தடியடி, கண்ணீர்புகை குண்டு வீச்சை தாங்கி விவசாயிகள் டெல்லிக்குள் நுழைந்தனர்.

டெல்லி நோக்கி பேரணி

டெல்லி நோக்கி பேரணி

நவம்பர் 28: ஆயிரக்கணக்கான விவசாயிகள் டிராக்டர் பிற வாகனங்கள் மூலம் டெல்லி நோக்கி பேரணி
டிசம்பர் 2: டெல்லியின் சிங்கு எல்லை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தொடர் போராட்டம்
டிசம்பர் 3; விவசாயிகள்-மத்திய அரசு இடையே பேச்சுவர்த்தை நடந்தது
டிசம்பர் 5: விவசாயிகள்-மத்திய அரசு இடையே 5-ம் கட்ட பேச்சுவர்த்தை தோல்வி
டிசம்பர் 8: வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நாடு தழுவிய பந்த்
டிசம்பர் 20: டெல்லியில் விவசாயிகள் 25-வது நாளாக போராட்டம்
டிசம்பர் 30: விவசாயிகள் போராட்டம் 30-வது நாளை எட்டியது

பேச்சுவர்த்தை தோல்வி

பேச்சுவர்த்தை தோல்வி

ஜனவரி 4: விவசாயிகள்-மத்திய அரசு இடையே 7-ம் கட்ட பேச்சுவர்த்தை தோல்வி
ஜனவரி 6: கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் 42-வது நாளாக போராட்டம்
ஜனவரி 7: டெல்லியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பிரமாண்ட டிராக்டர் பேரணி
ஜனவரி 8: விவசாயிகள்-மத்திய அரசு இடையே 8-ம் கட்ட பேச்சுவர்த்தையும் தோல்வி
ஜனவரி 12: வேளாண் சட்டங்களை செயல்படுத்த இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு

English summary
The Supreme Court today issued an injunction restraining the implementation of 3 agricultural laws of the Central Government
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X