டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உலகில் செல்வாக்கு மிகுந்த 100 பேர்.. டைம்ஸ் வெளியிட்ட பட்டியல்.. மோடிக்கு நோ.. இடம்பிடித்த இம்ரான்

உலகில் செல்வாக்கு மிகுந்த 100 பேரின் பட்டியலை டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்டு இருக்கிறது.

Google Oneindia Tamil News

டெல்லி: உலகில் செல்வாக்கு மிகுந்த 100 பேரின் பட்டியலை டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்டு இருக்கிறது.

உலகில் செல்வாக்கு மிகுந்த நபர்களின் பட்டியலை எல்லா வருடமும் பிரபல ஆங்கில பத்திரிக்கையான டைம்ஸ் வெளியிடும். இந்த பட்டியலில் இடம்பெறும் நபர்கள் உலகம் முழுக்க பிரபலமாக இருப்பார்கள்.அதேபோல் அவர்கள் இருக்கும் துறையில் முக்கிய சாதனைகளை செய்து இருப்பார்கள்.

சினிமா, மக்கள் பணி, அரசியல், விளையாட்டு என்று பல்வேறு துறைகளில் இருந்து முக்கிய நபர்களை தேர்வு செய்வார்கள். எல்லா வருடமும் 100 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு இந்த பட்டியல் வெளியிடப்படும்.

சவுதியோடு செம க்ளோஸ் ஆன இந்தியா.. மோடி - சல்மான் உருவாக்கிய புதிய கவுன்சில்.. என்ன சிறப்பு?சவுதியோடு செம க்ளோஸ் ஆன இந்தியா.. மோடி - சல்மான் உருவாக்கிய புதிய கவுன்சில்.. என்ன சிறப்பு?

யார் முக்கியம்

யார் முக்கியம்

இந்த நிலையில் 2019ம் வருடத்திற்கான பட்டியலில் முக்கியமான நபர்கள் பலர் இடம்பெற்று இருக்கிறார்கள். உலகில் செல்வாக்கு மிகுந்த முன்னோடிகள் பட்டியலில் இந்தியாவில் இருந்து முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜுவின் மகளும் சீனியர் வழக்கறிஞருமான அருந்ததி கட்ஜு இடம்பெற்றுள்ளார். இவருடன் வழக்கறிஞர் மேனகா குருசாமி இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

உலகம் முழுக்க

உலகம் முழுக்க

இவர்கள் இருவரும் இந்தியாவில் மதிக்கப்படும் வழக்கறிஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மிக முக்கியமான பெண்கள், வறுமை, ஒடுக்கப்பட்ட மக்கள் தொடர்பான வழக்குகளை இவர்கள் வாதாடி இருக்கிறார்கள். இவர்கள்தான் இந்தியாவில் ஒரு பாலின சேர்க்கை வழக்கை தொடர்ந்து 377 சட்டத்தை மாற்றினார்கள். இவர்கள் இருவரும் காதலர்கள் என்பது தனி செய்தி! (காதலுக்காக இந்திய அரசியலமைப்பு சட்டத்தையே மாற்றியவர்கள்!)

இந்திய வம்சாவளி

இந்திய வம்சாவளி

அதேபோல் இந்த பட்டியலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஹசன் மின்ஹாஜ் என்ற ஸ்டாண்ட் அப் காமெடியன் இடம்பெற்றுள்ளார். இவர் நெட்பிளிக்ஸ் மூலம் உலகம் முழுக்க பிரபலம் அடைந்தவர். அமெரிக்காவில் நடந்த ஹவுடி மோடி விழாவில் இவரின் புகைப்படம் காட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் இவரை நிகழ்ச்சிக்கு உள்ளே அனுமதிக்கவில்லை.

நடிப்பு

நடிப்பு

கலைத்துறையில் டுவைய்ன் ஜான்சன் எனப்படும் தி ராக், காலித், ஆஸ்கார் வென்ற ரெமி மாலிக், கேப்டன் மார்வெல் புகழ் ப்ரி லார்சன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். தலைவர்கள் பட்டியலில் நிறைய ஷாக் மாற்றங்கள் நடந்துள்ளது. அதன்படி அமெரிக்க காங்கிரஸ் சபாநாயகர் நான்ஸி பெலோசி இடம்பிடித்துள்ளார்.

மோடி இல்லை

மோடி இல்லை

அதேபோல் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சமூகவியல் போராளி சிறுமி கிரேட்டா தன்பர்க், இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு, போப் பிரான்சிஸ், சீன அதிபர் ஜி ஜின்பிங், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், மலேசிய பிரதமர் மகதீர் முகமது ஆகியோர் பெயர் இடம்பெற்றுள்ளது. பிரதமர் மோடி இதில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Time 100 list released: Imran Khan, Hasan Minhaj, Menaka Guruswamy and Arundhati are listed from Asia.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X