டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வருமான வரி தாக்கல் காலக்கெடு நீட்டிப்பு.. பான்-ஆதார் எண்களை இணைக்க அடுத்த ஆண்டு மார்ச் 31வரை அவகாசம்

Google Oneindia Tamil News

டெல்லி: 2018-19 நிதியாண்டிற்கான வருமான வரி அறிக்ககை (ITR) தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை மத்திய அரசு 2020ம் ஆண்டு ஜூலை 31 வரை, ஒரு மாதத்திற்கு நீட்டித்துள்ளது. இதேபோல, ஆதார் அட்டையை, பான் நம்பருடன் இணைப்பதற்கான கால வரம்பையும் மத்திய அரசு நீட்டித்துள்ளது.

பான் கார்டுடன் ஆதார் நம்பரை இணைக்க, 2021ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை, காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலையடுத்து, அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

Time extended for filing of original, revised income-tax returns

மத்திய அரசு முன்னதாக 2019-20ம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் காலக்கெடுவை, 2020ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதிக்கு நீட்டித்தது.

மத்திய நேரடி வரி வாரியம் (சிபிடிடி) வெளியிட்ட அறிவிப்பின்படி, 2018-19 நிதியாண்டிற்கான (AY 2019-20) அசல் மற்றும் திருத்தப்பட்ட வருமான வரி வருமானத்தை தாக்கல் செய்வதற்கான காலம், 2020ம் ஆண்டு ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இந்த வருடம் 'வரலாறு காணாத' பொருளாதார வீழ்ச்சி.. சர்வதேச நாணய நிதியம் கணிப்புஇந்தியாவில் இந்த வருடம் 'வரலாறு காணாத' பொருளாதார வீழ்ச்சி.. சர்வதேச நாணய நிதியம் கணிப்பு

2019-20 நிதியாண்டிற்கான (AY 2020-21) வருமான வரி வருமானத்திற்கான தேதி 2020 நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சிறு மற்றும் நடுத்தர வர்க்க வரி செலுத்துவோருக்கு நிவாரணம் வழங்குவதற்காக, வரி செலுத்துவோரின் 1 லட்சம் வரை சுய மதிப்பீட்டு வரி செலுத்தும் தேதியும் 2020 நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வருமான வரிச் சட்டம், 1961 (ஐடி சட்டம்)ல் குறிப்பிடப்பட்டுள்ள தேதிக்குள்ஸ சுய மதிப்பீட்டு வரி முழுவதுமாக செலுத்தப்படலாம். தாமதமாக பணம் செலுத்துவது ஐடி சட்டத்தின் பிரிவு 234 ஏ இன் கீழ் வட்டி கட்ட வேண்டிய சூழலை ஏற்படுத்தும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
In another development, the Central government on Wednesday night extended the deadline to link Aadhaar with PAN till March 31, 2021. Also Read - Relief For Taxpayers: Govt Extends Deadline For Filing ITR For FY 2018-19 Till July 31
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X