டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தூக்கத்திலிருந்து எழும்பியது முதல் தூக்கு வரை.. நிர்பயா குற்றவாளிகளின் கடைசி திக் திக் நிமிடங்கள்

Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டு மக்களையே நிம்மதி அடைய செய்த நிர்பயா குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டது எப்படி என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

Recommended Video

    நிர்பயா குற்றவாளிகளுக்கு நேர்ந்த கதி இதுதான்

    2012-ஆம் ஆண்டு டெல்லியில் பேருந்தில் பயணம் செய்த மருத்துவ மாணவி நிர்பயா 6 பேர் கொண்ட வெறியர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த 6 பேரில் முக்கிய குற்றவாளியான ராம் சிங் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இன்னொருவர் சிறுவன் என்பதால் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்பட்டார். இதையடுத்து மீதமுள்ள 4 குற்றவாளிகளான அக்ஷய் தாக்கூர், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா ஆகியோருக்கு இன்று அதிகாலை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

     நிர்பயாவுக்கு நீதி

    நிர்பயாவுக்கு நீதி

    இதன் மூலம் 7 ஆண்டுகளுக்கு பிறகு நிர்பயாவுக்கு நீதி கிடைத்துள்ளது. இந்த தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் நேரத்தில் திகார் சிறை வாயிலில் துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டனர். இந்த தண்டனை நிறைவேற்றப்பட்ட கடைசி நேர தகவல்களை பார்ப்போம்.

    அதிகாலை 4 மணி- 4 குற்றவாளிகளும் எழுப்பப்பட்டு குளிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

     சிற்றுண்டி

    சிற்றுண்டி

    4.15 மணி- தங்கள் மதங்களின் புனித நூல்களின்படி தயாராக நேரம் வழங்கப்பட்டது. ஆனால் அதை அவர்கள் மறுத்துவிட்டனர். இதையடுத்து அவர்கள் 4 பேருக்கும் கடைசியாக சிற்றுண்டி கொடுக்கப்பட்டது.

    4.30 மணி- தூக்கு மேடைக்கு அழைத்து செல்லப்படுவதற்கு முன்னர் அவர்கள் 4 பேருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்கும்படியான கடிதமோ அறிவிப்போ ஏதேனும் வந்துள்ளதா என சிறைத் துறை கண்காணிப்பாளர் சரிபார்த்தார். அது போல் எந்த ஆவணங்களும் வரவில்லை.

     கைகள் கட்டிய நிலையில்

    கைகள் கட்டிய நிலையில்

    5.20 மணி- 4 பேரின் முகத்திலும் துணி போர்த்தப்பட்டது. பின்னர் கைகள் கட்டப்பட்டது. அவர்கள் 4 பேரும் தூக்கு மேடைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அந்த சமயத்தில் மற்ற குற்றவாளிகள் யாரும் வெளியே வர அனுமதி வழங்கப்படவில்லை.

     நீதிபதி கையெழுத்து

    நீதிபதி கையெழுத்து

    5.25 மணி- தூக்கு மேடைக்கு வந்தவுடன் அங்கிருந்த குற்றவியல் நீதிபதி 4 பேரின் கடைசி ஆசையையும் கேட்டார். மேலும் தூக்கிலிடும் போது அவரவர் மத நம்பிக்கையின் படி மதத் தலைவரை அழைத்து வர தயாராக இருப்பதாக சிறைத்துறை தெரிவித்தது. ஆனால் அதை 4 பேரும் மறுத்துவிட்டனர். பின்னர் தூக்கு தண்டனைக்கான ஆவணத்தில் குற்றவியல் நீதிபதி கையெழுத்திட்டார்.

     உறுதிப்படுத்திய அதிகாரி

    உறுதிப்படுத்திய அதிகாரி


    5.40 மணி- 4 பேரின் தூக்கு தண்டனையும் நிறைவேற்றப்பட்டது.

    5.40 மணி- 4 பேரும் தூக்கிலிடப்பட்டதை திகார் சிறை இயக்குநர் ஜெனரல் சந்தீப் கோயல் உறுதிப்படுத்தினார்.

    6 மணி- 4 குற்றவாளிகளும் இறந்துவிட்டனரா என்பதை மருத்துவ அதிகாரி மூலம் சோதிக்கப்பட்டது. அது உறுதி செய்யப்பட்டவுடன் அவர்களது உடல்கள் கீழே இறக்கப்பட்டன.

    7 மணி- 4 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக தீன் தயாள் உபாத்யாய மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

     ஈமச் சடங்கு

    ஈமச் சடங்கு

    8 மணி- பிரேத பரிசோதனை தொடங்கியது. இது முடிந்தவுடன் அவர்கள் சிறைத் துறை சட்டத்தின்படி அவர்களுக்கு இறுதிச் சடங்கு நடத்த 4 பேரின் உடலை வாங்கிக் கொள்கிறார்களா என குடும்பத்தாரிடம் கேட்கப்படுவர். அவர்கள் ஆம் என்றால் உடல்கள் அவர்களிடம் ஒப்படைக்கப்படும். இல்லாவிட்டால் சிறைத் துறை அதிகாரிகளே அவர்களுக்கு ஈமச்சடங்கை செய்து விடுவர். இதுதான் நடைமுறை.

    English summary
    Here are the timeline for death sentence carried out for Nirbhaya Convicts.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X