டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குல்பூஷன் ஜாதவை தூக்கிலிட தடை.. வழக்கு கடந்து வந்த பாதை

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியரான குல்பூஷன் ஜாதவ்-க்கு பாகிஸ்தான் விதித்த மரண தண்டனையை சர்வதேச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. குல்பூஷன் ஜாதவ் வழக்கு கடந்த வந்த பாதையை தற்போது பார்க்கலாம்.

2016 மார்ச் 3

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் அந்நாட்டுக்குள் ஈரானில் இருந்து சட்டவிரோதமாக ஊடுருவ முயன்றதாக குல்பூஷன் கைது செய்யப்பட்டார். அவரை இந்திய உளவாளி என அறிவித்தது பாகிஸ்தான்.

Timeline of Kulbhushan Jadhav Case


மார்ச் 25

குல்பூஷன் ஜாதவ் ஒப்புதல் வாக்குமூலம் என பாகிஸ்தான் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் இந்திய கடற்படை அதிகாரியாக தாம் பணியாற்றியதாக ஜாதவ் ஒப்புக் கொண்டிருக்கிறார் என கூறப்பட்டது. ஆனால் மத்திய அரசு, ஜாதவ் தற்போது கடற்படையில் பணிபுரியவில்லை. அவர் ஒரு முன்னாள் அதிகாரி என தெரிவித்தது.

ஏப்ரல் 28

குவெட்டா நகரில் ஜாதவ் மீது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது பாகிஸ்தான். பயங்கரவாத தடுப்பு பிரிவுகளின் கீழ் குல்பூஷன் ஜாதவ் மீது வழக்குகள் பாய்ந்தன.

மே 2

குல்பூஷன் வழக்கில் விசாரணை தொடங்கியது.

2017 ஏப்ரல் 10

குல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இந்தியா இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

மே 8

சர்வதேச நீதிமன்றத்தில் ஜாதவ் மீதான மரண தண்டனைக்கு எதிராக இந்தியா முறையீடு செய்தது. வியன்னா ஒப்பந்தங்களுக்கு எதிராக பாகிஸ்தான் செயல்படுகிறது என இந்தியா குற்றம்சாட்டியது.

Timeline of Kulbhushan Jadhav Case


2019 ஜூலை 17

குல்பூஷன் ஜாதவ் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய சர்வதேச நீதிமன்ற நீதிபதி அப்துல் யூசூப், குல்பூஷன் ஜாதவ் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை. எனவே, குற்றச்சாட்டை மறுபரிசீலனை செய்ய பாகிஸ்தானுக்கு அறிவுறுத்தினார்.

English summary
Here is the Timeline of Kulbhushan Jadhav case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X