டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திமுக கூட்டணி 33 தொகுதிகளில் வெல்லும்.. அதிமுக கூட்டணிக்கு 6.. அமமுகவுக்கு பூஜ்யம்: டைம்ஸ் நவ் சர்வே

Google Oneindia Tamil News

டெல்லி: தமிழகத்தில் திமுக கூட்டணி 33 தொகுதிகளை வெல்லும் என்று டைம்ஸ் நவ் மற்றும் விஎம்ஆர் அமைப்பு இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

முதல்கட்ட லோக்சபா தேர்தல் வரும் 11ம் தேதி துவங்க உள்ளது. தேர்தல் திருவிழா துவங்க மூன்று நாட்களே உள்ள நிலையில், மக்களின் மனநிலை என்ன என்பது பற்றி, டைம்ஸ் நவ் சேனல் தனது கருத்துக் கணிப்பை இன்று வெளியிட்டது.

மொத்தம் 960 இடங்களில், 14,301 வாக்காளர்களிடம், கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளதாக டைம்ஸ் நவ் தெரிவித்துள்ளது.

என்னுடைய அண்ணன் அழகிரி.. எடப்பாடியிடம் கெஞ்சினேன்.. நாகர்கோவில் பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் உருக்கம் என்னுடைய அண்ணன் அழகிரி.. எடப்பாடியிடம் கெஞ்சினேன்.. நாகர்கோவில் பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் உருக்கம்

திமுக கூட்டணி அபாரம்

இந்த கருத்துக் கணிப்பில், தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் எந்தெந்த கட்சிகள் எத்தனை தொகுதிகளை கைப்பற்றும் என்ற விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலுள்ள 39 தொகுதிகளில் திமுக-காங்கிரஸ் கூட்டணி 33 தொகுதிகளை வெல்லும். 6 தொகுதிகளை அதிமுக-பாஜக கூட்டணி வெல்லும். புதுச்சேரியிலுள்ள ஒரு தொகுதியை பாஜக-அதிமுக கூட்டணி வெல்லும். அமமுக போன்ற வேறு கட்சிகளுக்கு வாய்ப்பில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் அதிமுக கூட்டணியில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

வாக்கு சதவீதம்

வாக்கு சதவீதம்

வாக்கு சதவீத அடிப்படையில், திமுக-காங்கிரஸ் கூட்டணி 53.12 சதவீதம் பெறுமாம். அதிமுக-பாஜக கூட்டணி 39.61 சதவீத வாக்குகளை பெற வாய்ப்புள்ளதாகவும், இந்த கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்துக் கணிப்பு முடிவுகள், அதிமுக கூட்டணியினரின் உற்சாகத்தை குறைக்கும் வகையில் அமைந்துள்ளது.

காங்கிரஸ் நிலை

காங்கிரஸ் நிலை

மிகவும் எதிர்பார்க்கப்படும், உத்தர பிரதேசம் மாநிலத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில், 50 தொகுதிகளை பாஜக கூட்டணி வெல்லுமாம். பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி ஆகி கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணிக்கு 27 தொகுதிகளும், காங்கிரஸ் கூட்டணிக்கு 3 தொகுதிகளும் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்கிறது இந்த கருத்துக் கணிப்பு.

பாஜக கூட்டணி வெற்றி

பாஜக கூட்டணி வெற்றி

ஒட்டுமொத்தமாக, பாஜக கூட்டணிக்கு 279 தொகுதிகள் கிடைக்கும். காங்கிரஸ் கூட்டணிக்கு 149 தொகுதிகளும், பிறருக்கு 115 தொகுதிகளும் கிடைக்கும். இவ்வாறு அந்த கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. மொத்த லோக்சபா தொகுதி எண்ணிக்கை 543 ஆகும். இதில், குறைந்தபட்சம், 272 தொகுதிகளையாவது வெல்லும் கூட்டணிதான் ஆட்சியை பிடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், பாஜக கூட்டணி அறுதி பெரும்பான்மையை பிடித்து ஆட்சியமைக்கும் என கூறுகிறது டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு.

English summary
TIMES NOW-VMR opinion poll for LS elections projects 33 seats for UPA in Tamil Nadu and 6 seats for NDA
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X