டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டைம்ஸ் நவ் - விஎம்ஆர் சர்வே: தென்னிந்தியாவில் தாமரை மலரவே மலராது.. கருத்து கணிப்பை பாருங்க!

2019 லோக் சபா தேர்தலில் தென்னிந்தியாவில் அதிக இடங்களை காங்கிரஸ் கூட்டணிதான் வெல்லும் என்று டைம்ஸ் நவ் - விஎம்ஆர் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    தேர்தலில் பாஜக பெரிய அடி வாங்கும்... கருத்து கணிப்பில் தகவல்

    டெல்லி: 2019 லோக் சபா தேர்தலில் தென்னிந்தியாவில் அதிக இடங்களை காங்கிரஸ் கூட்டணிதான் வெல்லும் என்று டைம்ஸ் நவ் - விஎம்ஆர் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    லோக்சபா தேர்தல் குறித்து டைம்ஸ் நவ் - விஎம்ஆர் கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி தமிழகம்& புதுச்சேரியில் 40 இடங்களில் 36 இடங்களை திமுக - காங்கிரஸ் கூட்டணி வெல்லும்.

    அதிமுக கூட்டணி 4 இடங்களை வெல்லும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் மற்ற தென்னிந்திய மாநிலங்களின் நிலையும் இந்த கருத்து கணிப்பில் கூறப்பட்டு இருக்கிறது.

    தெலுங்கானா முடிவு

    தெலுங்கானா முடிவு

    டைம்ஸ் நவ் - விஎம்ஆர் கருத்து கணிப்புபடி தெலுங்கானாவில் 17 இடங்களில் காங்கிரஸ் கூட்டணி 5 இடங்களில் வெல்லும். தெலுங்கானாவில் பாஜக கூட்டணி 1 இடத்தில் வெல்லும். தெலுங்கானாவில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கூட்டணி 10 இடங்களில் வெல்லும். மற்றவை 1 இடத்தில் வெல்லும்.

    ஆந்திரா

    ஆந்திரா

    டைம்ஸ் நவ் - விஎம்ஆர் கருத்து கணிப்புபடி ஆந்திராவில் 25 இடங்களில் 23ல் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி வெல்லும். 2 இடங்களில் தெலுங்கு தேசம் கட்சி வெல்லும். மற்ற கட்சிகளுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என்று கூறப்பட்டு இருக்கிறது.

    கேரளாவில்

    கேரளாவில்

    டைம்ஸ் நவ் - விஎம்ஆர் கருத்து கணிப்புபடி கேரளாவில் 20 இடங்களில் காங்கிரஸ் கூட்டணி 16 இடங்களை வெல்லும். இடதுசாரிகள் கூட்டணி 3 இடங்களை வெல்லும். பாஜக கூட்டணி முதல்முறை 1 இடத்தை வெல்லும்.

    கர்நாடகாவில் யாருக்கு

    கர்நாடகாவில் யாருக்கு

    டைம்ஸ் நவ் - விஎம்ஆர் கருத்து கணிப்புபடி கர்நாடகாவில் 28 இடங்களில் காங்கிரஸ் கூட்டணி 14 இடங்களை வெல்லும். பாஜக கூட்டணி 14 இடத்தை வெல்லும். மற்ற கட்சிகளுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என்று கூறப்பட்டு இருக்கிறது.

    English summary
    Times Now - VMR opinion poll: Congress lead UPA will win more seats in South India.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X