டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வாட்ச்சில் தமிழை புகுத்திய டைட்டன் நிறுவனம்.. நம்ம தமிழ்நாடு என பெயரிட்ட சுவாரஸ்யம்

Google Oneindia Tamil News

டெல்லி: நம்ம டைட்டன் தமிழ்நாடு என்ற பெயரில் புதிதாக தொடங்கப்பட்ட வாட்ச் மாடல்களில் தமிழ் மொழியை அந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

டைட்டன் வாட்ச் நிறுவனம் புதுமை புகுத்துவதில் தனித்துவமானது ஆகும். இந்த நிறுவனத்தின் சார்பில் சாதாரண மக்கள் முதல் மிட்டா மிராசுகள் அணியும் வகையிலான வாட்ச்களை நிறுவனம் விற்பனை செய்கிறது.

Titan company launches Namma Tamilnadu watch collections

இந்த நிலையில் வாட்சில் தமிழ் மொழியை புகுத்தும் முயற்சியில் டைட்டன் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அதன்படி டைட்டன் தமிழ்நாடு என்ற பெயரில் தமிழ்மொழி மற்றும் தமிழர்களின் கலையை போற்றும் விதமாக அதன் நிறுவன வாட்சுகளில் தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ளது.

அது மட்டுமில்லாமல் வாட்ச்சின் உள்ளே தமிழக கோவில் தூண்கள், யாழி, கோபுரங்களை பொறித்துள்ளது. அதற்கு நம்ம தமிழ்நாடு வாட்ச் என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் பெண்கள் அணியும் வாட்ச்களில் காஞ்சிபுரம் புடவைகளில் பதிக்கப்படும் மயில் டிசைனை உள்ளே பதித்துள்ளனர். அதற்கு காஞ்சிபுரம் வாட்ச் பெயரிட்டுள்ளனர்.

விடிய விடிய பெய்த கனமழை.. உருகுலைந்தது குன்னூர்.. நீரில் அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள்விடிய விடிய பெய்த கனமழை.. உருகுலைந்தது குன்னூர்.. நீரில் அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள்

இதுகுறித்து டைட்டன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் உலகிலேயே மிகவும் பழமையான மொழி தமிழ்தான். காஞ்சிபுரம் பட்டு மல்பரி பட்டு நூலால் நெய்யப்பட்டு அதன் பாரம்பரியம் வெளிப்படுகிறது என குறிப்பிட்டுள்ளது.

English summary
Titan Company launches Namma Tamilnadu watch collections. The dial of the watch has Kanjeevaram Silk fabric.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X