டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆவேசமான எம்பிக்கள்.. இன்று ராஜ்யசபாவில் என்ன நடந்து... அரசு எடுக்கப் போகும் அதிரடி ஆக்ஷன்!

Google Oneindia Tamil News

டெல்லி: ராஜ்யசபா துணை தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டு, அவையின் விதிகள் குறித்து புத்தகத்தை கிழிக்க திரிணாமல் காங்கிரஸ் எம்பி ஓ பிரைன் கிழிக்க முயன்றதால் இன்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சபையில் இனறு நடந்த சம்பவங்களால் அதிர்ச்சி அடைந்த மத்திய அரசு, ஆவேசத்துடன் நடந்து கொண்ட எம்பிக்களுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் கொடுக்க யோசித்து வருகிறது,

சர்ச்சைக்குரிய விவசாய மசோதக்கள் மீது இன்று ராஜ்யசபாவில் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மூன்று மசோதாவும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.

ஏற்கனவே இந்த மசோதா லோக்சபாவில் நிறைவேறியுள்ளதால் அவை சட்டங்களாக அறிவிக்கப்படுவதற்காக குடியரசுத் தலைவரின ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

இன்று ராஜ்யசபாவில் நடந்தது துரதிர்ஷ்டவசமானது.. வெட்கக்கேடானது....ராஜ்நாத்சிங்இன்று ராஜ்யசபாவில் நடந்தது துரதிர்ஷ்டவசமானது.. வெட்கக்கேடானது....ராஜ்நாத்சிங்

புத்தகத்தை கிழிக்க முயற்சி

புத்தகத்தை கிழிக்க முயற்சி

முன்னதாக இன்று விவாதத்தின் போது மத்திய அரசை எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரெக் ஓ பிரையன் ராஜ்யசபா துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங்கின் இருக்கையை முற்றுகையிட்டார். அத்துடன் ராஜ்யசபா விதி புத்தகத்தை கிழிக்க முயன்றார் எதிர்க்கட்சி எம்பிக்களும் ராஜ்யசபா துணைத் தலைவரின் இருக்கையை ஆவேசத்துடன் முற்றுகையிட்டனர் இதனால் அவையில் பெரும் கூச்சல் குழப்பம் நிலவியது,

விவாதத்தை நீட்டிக்க மறுப்பு

விவாதத்தை நீட்டிக்க மறுப்பு

ஏனெனில் மசோதாக்களை நிறைவேற்ற அனுமதிக்க திட்டமிடப்பட்ட நேரத்திற்கு அப்பால் சபையின் அமர்வு நீட்டிக்கப்பட்டதால் எதிர்க்கட்சிகள் எடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவையில் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. நாளையும் விவாதத்தை நடத்திய அதன்பின்னரே வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரின. ஆனால் எதை ஏற்க ராஜ்யசபா துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் மறுத்தார். அத்துடன் குரல் வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டார்.

துணை தலைவர் இருக்கை முற்றுகை

துணை தலைவர் இருக்கை முற்றுகை

இதனால் ஆவேசம் அடைந்த ஒ பிரைன் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் ராஜ்யசபா துணை தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டனர், அப்போது பேரவை விதிகள் அடங்கிய ஆவணப் புத்தகத்தையும் கிழித்து முயன்றனர். அத்துடன் அதை ஹரிவன்ஷ் நாராயண் மீது வீசினர். மின்விசிறியையும் கீழே தள்ளிவிட முயற்சித்தனர். இதை பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்தனர். அப்போது அரசாங்கத்திற்கு எதிராக எம்பிக்கள் கடுமையான கோஷங்களை எழுப்பினர். விவசாயிகளுக்கு எதிரானது மசோதா என தொடர்ந்து குரல் எழுப்பினர். இந்த அமளிக்கு நடுவே விவசாய மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.

உரிமை மீறல் நோட்டீஸ்

உரிமை மீறல் நோட்டீஸ்

இந்நிலையில் ராஜ்யசபா துணை தலைவரை எம்பிக்கள் இன்று மோசமாக நடத்திவிட்டதாக ஆளும் கட்சியான பாஜக குற்றம்சாட்டி உள்ளது. இன்று சபையில் ஆவேசமாக நடந்து கொண்ட எம்பிக்களுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் கொண்டுவருவது குறித்து பரிசீலித்து வருகிறது. துணை குடியரசுத் தலைவரும் ராஜ்யசபா தலைவருமான வெங்கய்ய நாயுடுவை சந்தித்து பேசிய பின்னர் பிரதமரிடம் இதுபற்றி பேச திட்டமிட்டுள்ளன.

அவை என்ன நடந்தது

அவை என்ன நடந்தது

இதனிடையே அவை விதி புத்தகத்தை கிழித்ததாக கூறப்படுவதை திரிணாமல் காங்கிரஸ் எம்பி ஓ பிரைன் மறுத்தார். நான் புத்தகத்தை கிழித்த காட்சிகளை யாராவது எனக்குக் காட்ட முடிந்தால், நான் நாளை காலை ராஜ்யசபாவில் இருந்து ராஜினாமா செய்வேன். எனது தந்தை ஒரு வெளியீட்டாளர், நான் ஒருபோதும் புத்தகத்தின் ஒரு பக்கத்தையும் கிழிக்க மாட்டேன். மசோதாக்களை நாடாளுமன்ற குழுவுக்கு அனுப்ப எதிர்க்கட்சிகள் தீர்மானித்துக் கொண்டிருந்தன. இந்த மசோதாவை நிறைவேற்றும் நிலையில் இல்லை என்று இந்த அரசாங்கத்திற்கு தெரியும். 13 அல்லது 14 எதிர்க்கட்சி கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் இன்று, ஜனநாயகம் கொலை செய்யப்பட்டது. ராஜ்யசாபா தொலைக்காட்சி ஒளிபரப்பு கூட துண்டிக்கப்பட்டுவிட்டது, எனவே நாங்கள் ஆர்ப்பாட்டங்கள் வெளியே தெரிந்திருக்காது. என்னை நான்கு அல்லது ஐந்து பாதுகாவலர்கள் தூக்கி சென்றனர், . ஊடகங்கள் இங்கே இல்லை. மாநிலங்களவை தொலைக்காட்சி துண்டிக்கப்பட்டு தணிக்கை செய்யப்பட்டது. மாநிலங்களவையில் என்ன நடந்தது என்பதற்கான காட்சிகள் எங்களிடம் உள்ளன. உறுப்பினர்கள் வாக்களித்தனர், எங்களுக்கு அது மறுக்கப்பட்டது. இது முன்னோடியில்லாதது. நான் ஒரு விதி புத்தகத்தை கிழித்து எறிந்தேன் என்பது போனற் பிரச்சாரங்களை பரப்ப வேண்டாம். எம்.பி.க்கள் காட்சிகளை படமாக்க வேண்டியிருந்தது, நாங்கள் அதை சரியான நேரத்தில் வெளியிடுவோம். பாஜகவுக்கு இது வரலாற்று நாள், ஆனால் இது பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு ஒரு சோகமான நாள் "என்று கூறினார்,

ராஜ்யசபா செயலரிடம் மனு

ராஜ்யசபா செயலரிடம் மனு

இந்நிலையில், ராஜ்யசபா துணைத்தலைவர் ஹரிவன்ஷ் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முடிவு செய்தன. நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக ராஜ்யசபா செயலரிடம் மனு அளித்துள்ளனர். இந்த மனு மீது அவைத்தலைவர் வெங்கையா நாயுடு, நாளை பரிசீலனை செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தீங்கு விளைவிப்பவை

தீங்கு விளைவிப்பவை

இதுகுறித்து காங்கிரஸ் எம்பி அகமது பட்டேல் கூறும் போது, ‘ராஜ்யசபா துணைத் தலைவர் ஹரிவன்ஷ் ஜனநாயக மரபுகளை பாதுகாக்க வேண்டும். ஆனால், அதற்குப் பதிலாக அவரது இன்றைய அணுகுமுறை ஜனநாயக மரபுகள் மற்றும் செயல்முறைகளுக்கு தீங்கு விளைவிப்பதாக இருந்தது. அதனால் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடிவு செய்தோம்' இவ்வாறு கூறினார்.

English summary
Trinamool Congress MP Derek O'Brien on Sunday charged towards Deputy Chairman Harivansh Narayan Singh's podium tried to tear the rule book during a debate in Rajya Sabha on the farm bills.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X