டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழக பாஜகவினர் ஒருவருக்கும் தேசிய பதவி இல்லையே..அவமானத்தை ஜே.பி. நட்டாவிடம் சொல்லி புலம்பிய முருகன்

Google Oneindia Tamil News

டெல்லி: தமிழகத்தை சேர்ந்த ஒருவருக்கு கூட கட்சியில் தேசிய அளவிலான பதவிகள் வழங்கப்படாதது தொடர்பாக பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவிடம் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வேதனை தெரிவித்திருக்கிறார்.

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாகிகள் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. ஜேபி நட்டா வெளியிட்ட 70 பேருக்கும் மேலான நிர்வாகிகள் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகள் ஒருவருக்கு கூட தேசிய பதவி கொடுக்கப்படவில்லை.

TN BJP Chief Murugan meets Party National President J. P. Nadda

தேசிய செயலாளர் பதவியில் இருந்த ஹெச்.ராஜா அதில் இருந்து நீக்கப்பட்டிருந்தார். ஏற்கனவே தமிழகத்தில் படுமோசமான விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கும் பாஜக, இந்த விவகாரத்தில் படுஅவமானத்தை சந்திக்கவும் நேரிட்டது. ஆனாலும் கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டாத குறையாக பாஜக தலைவர்கள் சமாளித்து வருகின்றனர்.

பாஜகவுக்கு எதிராக.. திமுக தீர்மானம் போடும் என்று தெரிந்தும்.. வானதி சீனிவாசன் சொன்ன பதிலை பாருங்க..!பாஜகவுக்கு எதிராக.. திமுக தீர்மானம் போடும் என்று தெரிந்தும்.. வானதி சீனிவாசன் சொன்ன பதிலை பாருங்க..!

இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் எல். முருகன் டெல்லி சென்றுள்ளார். டெல்லியில் இன்று பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்தார். இச்சந்திப்பின் போது தமிழக பாஜகவினருக்கு ஒரு தேசிய பதவி கூட கொடுக்காதது குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

English summary
Tamilnadu BJP Chief Murugan met Party National President J. P. Nadda in Delhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X