டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிரதமர் நிவாரணம் அளிப்பாரென நம்புகிறேன்.. முதல்வர் பழனிச்சாமி பேட்டி

கஜா சேதம் குறித்து பிரதமர் மோடியிடம் ஆலோசித்த பின் முதல்வர் பழனிச்சாமி டெல்லியில் பேட்டி அளித்தார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    முதல்கட்டமாக ரூ. 15,000 கோடி கேட்கிறது தமிழகம்,முதல்வர் பேட்டி- வீடியோ

    டெல்லி: கஜா சேதம் குறித்து பிரதமர் மோடியிடம் ஆலோசித்த பின் முதல்வர் பழனிச்சாமி டெல்லியில் பேட்டி அளித்தார்.

    கஜா புயலால் தமிழகம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. 7 மாவட்டங்களில் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள்.

    தமிழக அரசு இதற்கு நிவாரண நிதியாக 1000 கோடி ஒதுக்கியுள்ளது. இந்த நிலையில் இன்று தமிழக முதல்வர் பழனிச்சாமி டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார். அதன்பின் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

    கஜா புயல் நிவாரணம்.. முதல்கட்டமாக ரூ. 15,000 கோடி கேட்கிறது தமிழகம் கஜா புயல் நிவாரணம்.. முதல்கட்டமாக ரூ. 15,000 கோடி கேட்கிறது தமிழகம்

    நிவாரண தொகை எவ்வளவு

    நிவாரண தொகை எவ்வளவு

    அவர் தனது பேட்டியில், கஜா நிவாரணத்திற்கு மத்திய அரசிடம் ரூ.15,000 கோடி கேட்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ரூ.1500 கோடி கேட்கப்பட்டுள்ளது. புயல் பாதிப்பு குறித்த விவரங்களை அவரிடம் தெரிவித்தேன். விரைவில் மத்திய குழு தமிழகம் வரும் என்று மோடி கூறினார்.

    மொத்த எண்ணிக்கை

    மொத்த எண்ணிக்கை

    கஜாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 63. மொத்தம் 3,41,770 வீடுகள் புயலால் சேதம் அடைந்துள்ளது. கஜாவால் 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி நிவாரணம் வழங்குவார் என்று நம்பிக்கை உள்ளது.

    எவ்வளவு அளிக்கப்படும்

    எவ்வளவு அளிக்கப்படும்

    கஜா புயலால் முழுவதும் சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு ரூ.10,000 அளிக்கப்படும். புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரம் ஒன்றுக்கு ரூ.600 அளிக்கப்படும். பகுதியாக சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு ரூ.4100 அளிக்கப்படும். மரத்தை வெட்ட ஒரு மரத்திற்கு ரூ.500 அளிக்கப்படும்.

    துறைகள் ரீதியாக

    துறைகள் ரீதியாக

    கஜா நிவாரணத்திற்காக ஊராட்சித்துறைக்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை துறைக்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத்துறைக்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்துக்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பேரூராட்சிகளின் இயக்குநரகத்திற்கு ரூ.5 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறைக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நகராட்சிக்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    திமுக எப்படி

    திமுக எப்படி

    திமுக அரசைவிட அதிமுக அரசு அதிக நிவாரணம் வழங்கியுள்ளது. நிஷா புயலின் போது திமுக குறைவான நிவாரணம் வழங்கியது. சாலை மார்க்கமாக ஸ்டாலின் எத்தனை இடங்களுக்கு சென்றார்.திமுக வேண்டுமென்றே அரசை குறை கூறுகிறது.

    வேலைகள்

    வேலைகள்

    சேத நிலவரத்தை அறிய வேண்டும் என்றால் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். அனைத்து இடங்களுக்கும் செல்ல வேண்டும். அதனால் நேரடியாக புயலால் சேதம் அடைந்த பகுதிகளுக்கு செல்வேன். ஏற்கனவே 4 அமைச்சர்கள் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பணியில் அமர்த்தப்பட்டு இருக்கிறார்கள், என்று கூறியுள்ளார்.

    English summary
    TN CM Palanisamy gives a press conference after his meet with PM Modi on Gaja relief work.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X