டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழக அரசு ரூ9,627 கோடி கூடுதல் கடனாகப் பெற மத்திய அரசு அனுமதி

Google Oneindia Tamil News

டெல்லி: தமிழ்நாடு அரசு வெளிச்சந்தையில் ரூ9,627 கோடி கூடுதல் கடனாகப் பெற மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இது தொடர்பான மத்திய அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாடு, வெளிச்சந்தையில் 9627 கோடி ரூபாயைக் கூடுதல் கடனாகப் பெற மத்திய நிதி அமைச்சகத்தின் செலவீட்டுத் துறை அனுமதி அளித்துள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறையினால் ஏற்பட்ட பற்றாக்குறையை (ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை) ஈடுசெய்ய மாநில அரசு வெளிச்சந்தையில் கடன் வாங்க அனுமதி அளிக்குமாறு மத்திய அரசைக் கோரியிருந்தது.

TN gets permission to borrow an additional amount of Rs 9,627 crore

மேலும் 21 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்கள், டெல்லி, ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்கள் இதேபோல் அனுமதி கேட்டிருக்கின்றன. தமிழகத்துடன் சேர்த்து மொத்தம் 21 மாநிலங்கள் 78 ஆயிரத்து 542 கோடி ரூபாய் கடனாகப் பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பள்ளி கல்வியை மேம்படுத்த ரூ.5718 கோடி மதிப்பிலான உலக வங்கி திட்டம்- மத்திய அமைச்சரவை ஒப்புதல்பள்ளி கல்வியை மேம்படுத்த ரூ.5718 கோடி மதிப்பிலான உலக வங்கி திட்டம்- மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ஏற்கனவே 1.10 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு இந்த மாநிலங்கள் கடன் பெற அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
The Department of Expenditure, Ministry of Finance, has today granted permission to Tamil Nadu to raise an additional amount of Rs.9,627 crore through open market borrowings.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X