டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மருத்துவ படிப்பில் 50% ரிசர்வேசன்: நடப்பாண்டே அமல்படுத்த சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு அப்பீல்

மருத்துவ படிப்பில் ஒபிசி இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. அதில் நடப்பாண்டே 50 சதவிகித இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்றும் தமிழக அரசு தெரிவி

Google Oneindia Tamil News

டெல்லி: மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து மத்திய அரசு சட்டம் இயற்றலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது. ஓபிசி பிரிவினருக்கு நடப்பாண்டே 50 சதவிகித இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்துள்ளது.

மருத்துவப்படிப்பில், அகில இந்திய ஒதுக்கீட்டில் 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கக்கோரி, தமிழக அரசு மற்றும் அ.தி.மு.க, தி.மு.க, உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம்,மருத்துவ படிப்புகளில் இட ஒதுக்கீடு வழங்க எந்தத் தடையும் இல்லை என்ற வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினை அளித்தது.

TN govt appeals to the SC for 50% OBC reservation in medical studies

மருத்துவப் படிப்பில், ஓ.பி.சி பிரிவினருக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு தர உச்ச நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும் என்ற இந்திய மருத்துவ கவுன்சிலின் வாதத்தை ஏற்க முடியாது. இட ஒதுக்கீடு வழங்க, விரைவாக மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்று தெரிவித்தது.

இட ஒதுக்கீடு கோர ஓபிசி பிரிவினருக்கு உரிமை உள்ளது. அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை மறுக்க முடியாது. இட ஒதுக்கீடு வழங்க எந்தத் தடையும் இல்லை என்கிற அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

மத்திய மாநில அரசுகளின் சுகாதாரத்துறை அதிகாரிகள், இந்திய மருத்துவ கவுன்சில் என மூன்று தரப்புக் குழு அமைத்து, கலந்து ஆலோசித்து இடஒதுக்கீடு வழங்கும் நடைமுறைகள் குறித்து மூன்று வாரங்களில் முடிவெடுக்குமாறு உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருந்தது.

காங்கிரஸ் எப்போதும் இந்தி திணிப்பை ஆதரிக்கவில்லை... முதல்வர் குற்றச்சாட்டுக்கு கே.எஸ்.அழகிரி மறுப்புகாங்கிரஸ் எப்போதும் இந்தி திணிப்பை ஆதரிக்கவில்லை... முதல்வர் குற்றச்சாட்டுக்கு கே.எஸ்.அழகிரி மறுப்பு

இந்நிலையில் ஒபிசி இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று மேல்முறையீடு செய்துள்ளது. அதில் நடப்பாண்டே 50 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

English summary
TamilNadu government has appealed to the Supreme Court for 50% OBC reservation in medical studies. The Chennai High Court had ruled that the Central Government could enact legislation to provide 50 per cent reservation for OBCs in all-India allotted seats in medical courses.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X