டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதெப்படி சரஸ்வதி சிந்துவெளி நாகரிகம் என சொல்லலாம்? நிர்மலா சீதாராமனுக்கு தமிழக எம்பி-க்கள் எதிர்ப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: சிந்துவெளி நாகரிகத்தை சரஸ்வதி சிந்துவெளி நாகரிகம் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டதற்கு தமிழக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

2020-21-க்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அவர் தமது பேச்சின் போது சிந்துவெளி நாகரிகத்தை சரஸ்வதி சிந்துவெளி நாகரிகம் என மீண்டும் மீண்டும் குறிப்பிட்டார்.

TN MPs oppose for Nirmala Sitharamans remarks on Indus-Sarasvati ocivilisation

இதற்கு தமிழக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர். சிந்துவெளி நாகரிகம் என்பது திராவிடர் நாகரிகம் என ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர்.

ஆனால் அங்கே சரஸ்வதி நதி ஓடியதாகவும் அதனால் அது சரஸ்வதி நதி நாகரிகம்; சரஸ்வதி சிந்துவெளிநாகரிகம் என்றும் அங்கு செழித்தோங்கியது ஆரியர் நாகரிகம் எனவும் ஒருதரப்பினர் கூறுகின்றனர்.

நாடு முழுக்க பைபர் ஆப்டிக்ஸ்.. வருகிறது ஏஐ.. 'டெக்கி' கிராமங்களை உருவாக்க நிர்மலா அசத்தல் அறிவிப்பு!நாடு முழுக்க பைபர் ஆப்டிக்ஸ்.. வருகிறது ஏஐ.. 'டெக்கி' கிராமங்களை உருவாக்க நிர்மலா அசத்தல் அறிவிப்பு!

இதனை பிரதிபலிக்கும் வகையில் நிர்மலா சீதாராமனும் நாடாளுமன்றத்தில் சரஸ்வதி சிந்துவெளி நாகரிகம் என குறிப்பிட்டதால் தமிழக எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்துத்துவ நாகரிகமாக காட்ட முயற்சி

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சி எம்.பி சு. வெங்கடேசன் கூறுகையில், சிந்துசமவெளி நாகரிகத்தை திட்டமிட்டு இந்துத்துவ நாகரிகமாக காட்ட முயற்சிக்கப்படுகிறது. சிந்துசமவெளி நாகரிகத்தின் வரலாற்றையே திரிக்க மீண்டும் மீண்டும் முயற்சி நடைபெறுகிறது என்றார்.

English summary
Tamilnadu MPs had opposed for the Union Finance Minister Nirmala Sitharaman's remarks on Indus-Sarasvati ocivilisation during Budget speech.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X