டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மாட்டுக்காக கொலை நடப்பதை தடுக்கனுமா.. நான் சொல்றத கேளுங்க.. கிரிராஜ் சிங் அதிரி புதிரி ஐடியா

Google Oneindia Tamil News

Recommended Video

    மாட்டுக்காக கொலைகளை தடுக்க கிரிராஜ் சிங் அதிரி புதிரி ஐடியா- வீடியோ

    டெல்லி: செயற்கை கருவூட்டல் மூலம், பெண் கன்றுக்குட்டிகள் மட்டுமே பிறப்பதை உறுதிப்படுத்தினால், நாட்டில் 'கும்பல் கொலை' (mob lynching) சம்பவங்களை குறைக்க உதவும் என்று மத்திய கால்நடைத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

    வித்தியாசமான ஐடியாக்களை அவ்வப்போது பாக்கெட்டில் இருந்து எடுத்துவிட்டு, தெறிக்கவிடுவதில் பாஜகவில் பலர் முன்னணியில் உள்ளனர். அவர்களில் மிக முக்கியமானவர் கிரிராஜ் சிங். இவர் மத்திய அமைச்சராகவேறு இருக்கிறார். கேட்கவா வேண்டும். இதோ அடுத்த ஐடியாவோடு வந்துவிட்டார்.

    To tackle mob lynchings Giriraj Singh says rear only female calves

    எதிர்காலத்தில், பெண் கன்றுகள் மட்டுமே பிறக்கும் வகையில் விந்தணு வகைப்பாட்டில் மாறுபாடுகளை செய்ய வேண்டும். அப்படியானால், மாடுகள் தெருவில் விரட்டி விடப்படாது. பசுக்களை எல்லாரும் வீட்டில் வைத்து பராமரித்து பலன் பெறுவார்கள். எனவே, கால்நடைகளின் பெயரில் கும்பல் கொலை வழக்குகளும் வராது.

    கால்நடை வளர்ப்பு துறை புறக்கணிக்கப்பட்டதாக உள்ளது. நான் சொல்லும் ஐடியாப்படி நடந்தால், கொலை சம்பவங்களை தடுப்பதோடு, விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தவும் உதவும்.

    கால்நடை வளர்ப்பு ஒரு புறக்கணிக்கப்பட்ட துறையாக இருந்து வருகிறது. நாட்டின் சுதந்திரத்திற்குப் பிறகு இந்தத் துறைக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. இப்போது, ​​பிரதமர் நரேந்திர மோடி ஒரு தனி அமைச்சகத்தை உருவாக்கியுள்ளார், எனவே இந்தத் துறையை வளர்ப்பதற்கும், உற்பத்தி மற்றும் வளர்ச்சியை அதிகரிப்பதற்காக முதலீடுகளை ஈர்ப்பதற்கும் நாங்கள் நடவடிக்கை எடுப்போம், என்றார் கிரிராஜ் சிங்.

    English summary
    Ensuring that only female calves are born through artificial insemination will help bring down mob lynching cases in the country, Union Minister Giriraj Singh said.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X