டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மாதவிடாய் கறை- இது கறையல்ல.. தூய்மையின் சின்னம்.. இன்று மாதவிடாய் சுகாதார நாள்! #Reddotchallenge

Google Oneindia Tamil News

டெல்லி: உலக மாதவிடாய் சுகாதார நாளையொட்டி உள்ளங்கையின் நடுவில் சிகப்பு நிற புள்ளி வைத்து புகைப்படம் வெளியிடும் சவால்கள் சமூகவலைதளங்களில் டிரென்டாகி வருகிறது.

உலகின் பல்வேறு பகுதிகளில் மாதவிடாய் என்றாலே தாழ்வான மனப்பான்மையுடனே பார்க்கப்படுகிறது. பெரும்பாலான மக்கள் இதை அசுத்தமாகவே கருதுகிறார்கள். இது பெண்கள் புறக்கணிப்பிற்கும் பாகுபாட்டிற்கும் வழிவகுக்கிறது.

இது சிறுநீர், மலம் போன்று இயற்கையானதொரு கழிவு என்பது அனைவரும் புரிந்து கொள்வது முக்கியமானதாகும். ஒரு பெண் ஆரோக்கியமாக இருக்கிறார் என்பதற்கான குறியீடு இதுதான். அசுத்தம் என்பதற்கு ஒன்றும் இல்லை. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உலக மாதவிடாய் சுகாதார தினம் மே 28 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

ஒருநாள் விட்டு ஒருநாள் வகுப்பு.. 6 அடி கேப்.. நோ கேண்டீன்! பள்ளிகள் திறப்பு பற்றி வெளியான பரபர தகவல்ஒருநாள் விட்டு ஒருநாள் வகுப்பு.. 6 அடி கேப்.. நோ கேண்டீன்! பள்ளிகள் திறப்பு பற்றி வெளியான பரபர தகவல்

மிகவும் சாதாரணம்

மிகவும் சாதாரணம்

இதுகுறித்து விழிப்புணர்வை கிராமப்புறங்களில் மட்டும் அல்ல நம் வீடுகளிலும் தொடங்க வேண்டும். இளம் வயதிலேயே மாதவிடாய் என்றால் என்ன என்பது குறித்து மகள்களுடன் பேச வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு அது குறித்த ஒரு புரிதல் ஏற்படும். இது மிகவும் சாதாரணமானது என நினைப்பர். விழிப்புணர்வு குறித்து பேசும் வேளையில் சமூகவலைதளங்களில் ஒரு சுவாரஸ்யமான சவால் வைரலாகி வருகிறது.

ஹேஷ்டேக்

ஹேஷ்டேக்

அதுதான் ரெட் டாட் சாலன்ஞ். யூனிசெப் இந்தியாவுடன் இணைந்து இந்த விழிப்புணர்வு திட்டம் தொடங்கப்பட்து. இந்த சவால் என்னவென்றால் உள்ளங்கையின் நடுவில் சிறிய மையை தடவி அதை புகைப்படமாக எடுத்து சமூகவலைதளங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதன் மூலம் மாதவிடாய் தொடர்பான அனைத்து தடைகளும் உடைக்கப்படும் என்பதே நோக்கமாகும். இணையதளத்தில் #RedDotChallenge என்ற ஹேஷ்டேக் சாலஞ்ஜ் வைரலாகி வருகிறது.

சங்கடம்

மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் கறைகளை வலிமையின் சின்னமாக கருத வேண்டிய தருணம் இது. சங்கடப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்கிறார் இந்த வலைஞர்.

சிவப்பு மை

கொரோனா வந்ததால் மாதவிடாய் நின்று விடாது என கூறி உள்ளங்கையில் சிவப்பு மையிட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்கள்.

இயற்கை

மாதவிடாய் குறித்து பேசுவதற்கு தயங்குகிறீர்களா, அவ்வாறெனில் ஏன் என உங்கள் மனதிற்குள் கேட்டுக் கொள்ளுங்கள். இது இயற்கையான ஒன்று. இதில் வெட்கப்பட ஒன்றும் இல்லை.

இயற்கை

#reddotchallenge- எனும் புரட்சியில் இணைந்ததில் மகிழ்ச்சி, மாதவிடாய் என்பது அனைத்து பெண்களும் தங்கள் வாழ்நாளில் எதிர்கொள்ளும் இயற்கையான சுழற்சி.

English summary
As today is world Menstrual Hygiene day is celebrated, red dot challenge is done by spreading awareness about menstruation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X