டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னை, கோவை, வேலூரில் தெரியும் சூரிய கிரகணம்.. எதை செய்யலாம்? எதை செய்யக் கூடாது?

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் நிகழும் சூரிய கிரகணத்தை அடுத்து நாம் செய்யக் கூடியதும் செய்யக் கூடாதவையும் என்னென்ன என வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Recommended Video

    Solar eclipse எங்கு எப்போது தெரியும்? எதெல்லாம் செய்ய கூடாது

    கங்கண சூரிய கிரகணம் அல்லது நெருப்பு வளைய சூரிய கிரகணம் இன்று காலை 9.15 மணிக்கு தொடங்கி பிற்பகல் 2.30 மணிக்கு முடிந்தது. இது பகல் 12.10 மணிக்கு உச்சத்தை பெற்றது.

     Today Solar Eclipse: What are the Dos and Donts?

    இன்று நடைபெறும் சூரிய கிரகணத்தின் போது நாம் செய்ய வேண்டியவை:

    • சூரியனின் கதிர்வீச்சுகள் மிகவும் பிரகாசமாக தெரியும். இதனால் நேரடியாக பார்க்கும் போது கண்களுக்கு பாதிப்பை அளிக்கும். இதற்காக சிறப்பு கண்ணாடிகளை வாங்கி பயன்படுத்தலாம். சூரியன் மீதும் கிரகணம் மீதும் ஈடுபாடு கொண்டவர்கள் எனில் சூரியனை பார்க்கும் கண்ணாடிகளைபயன்படுத்தலாம்.
    • மற்றபடி இதை ஒரு நிகழ்வாக பார்க்க வேண்டும் என்றால் கார்டுபோர்டு கொண்டு பார்க்கலாம். ஊசி துளை கேமரா (Pinhole camera) மூலம் இந்த நிகழ்வை பார்க்கலாம். இது ஒரு பக்கத்தில் தேய்த்த கண்ணாடியும் மறுபக்கத்தில் சிறு துளையும் கொண்ட ஒரு ஒளி புகாத பெட்டியாகும். இதில் லென்ஸ்கள் இருக்காது. படிமத்தின் புறக் கோட்டினை எளிதில் பெற உதவும். இதன் மூலம் சூரியனின் பிம்பத்தை சுவற்றில் கொண்டு வந்து பார்க்கலாம்.
    • இதற்காக நீங்கள் பின்ஹோல் கேமரா கார்டு ஷீட், கண்ணாடியை கொண்டு தூரத்தில் உள்ள சுவற்றில் சூரியனின் படத்தை பிரதிபலிக்கலாம்.

    இந்தியாவில் தென்படும் கடைசி சூரிய கிரகணம்.. இத்துடன் 2022-இல்தான்.. கிரகணம் பற்றிய சுவாரஸ்யங்கள்இந்தியாவில் தென்படும் கடைசி சூரிய கிரகணம்.. இத்துடன் 2022-இல்தான்.. கிரகணம் பற்றிய சுவாரஸ்யங்கள்

    இன்றைய தினம் செய்யக் கூடாதவை:

    • சூரியனை நேரடியாக பார்க்கக் கூடாது
    • சாதாரண கண்ணாடிகளை கொண்டு பார்க்கக் கூடாது
    • தண்ணீரில் சூரியனின் பிரதிபலிப்பை பார்க்கக் கூடாது
    • விளக்கு அல்லது கார்பன் கொண்டு கண்ணாடியை மூடி அதன் மூலம் கிரகணத்தை காணலாம் என
    • ஒரு போதும் முயற்சிக்க வேண்டாம்.

    English summary
    Here are the list of Do's and Dont's of Solar Eclipse 2020.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X