டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டெல்லியில் 34-வது நாளாக போராடும் விவசாயிகள்... இன்று மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை..!

Google Oneindia Tamil News

டெல்லி: புதிய விவசாய சட்டங்களை திரும்பப்பெறக் கோரி டெல்லியில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் இன்று மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

இந்தப் பேச்சுவார்த்தையில் புதிய விவசாய சட்டம், குறைந்த பட்ச ஆதார விலைக்கு சட்ட உத்தரவாதம், உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இருதரப்பிலும் விரிவாக விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

Today the farmers are in talking with the central government

இதனிடையே டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் இன்று டிராக்டர் பேரணி நடத்தப்படும் என அறிவித்திருந்த நிலையில், மத்திய அரசுடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தை காரணமாக டிராக்டர் பேரணியை ஒத்தி வைத்துள்ளது.

புதிய விவசாய சட்டங்களை திரும்பப்பெற முடியாது என்பதை இதற்கு முன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது மத்திய அரசு விவசாய சங்கப் பிரதிநிதிகளிடம் திட்டவட்டமாக தெரிவித்திருந்தது. பதிலுக்கு விவசாயிகளும் சட்டத்தை கைவிடும் வரை போராட்டம் ஓயாது என முழக்கமிட்டு கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தை தொடர்கின்றனர்.

Today the farmers are in talking with the central government

இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையிலும், புதிய விவசாய சட்டங்களை திரும்பப்பெறக் கோரி விவசாய சங்கப் பிரதிநிதிகள் கடுமையாக அழுத்தம் கொடுப்பார்கள் எனத் தெரிகிறது. இதனிடையே மத்திய அரசு இந்த விவகாரத்தில் என்ன நிலைப்பாட்டை எடுக்கவிருக்கிறது என்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாளை பேச்சுவார்த்தைக்கு விவசாயிகள் விதித்த கடும் நிபந்தனை..அமைச்சர்களுடன் அமித்ஷா நீண்ட நேரம் ஆலோசனைநாளை பேச்சுவார்த்தைக்கு விவசாயிகள் விதித்த கடும் நிபந்தனை..அமைச்சர்களுடன் அமித்ஷா நீண்ட நேரம் ஆலோசனை

விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெறும் நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, வேளாண்மை துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் சந்தித்து முக்கிய ஆலோசனை மேற்கொண்டார்.

English summary
Today the farmers are in talking with the central government
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X