டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புவி ஈர்ப்பு விசையை கண்டுபிடித்தது ஐன்ஸ்டீனாம்... நெட்டிசன்கள் பிடியில் பியூஷ் கோயல்

Google Oneindia Tamil News

டெல்லி: புவி ஈர்ப்பு விசையை கண்டுபிடித்த ஐன்ஸ்டீனுக்கு கணக்கு ஒரு போதும் உதவியதே இல்லை என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தவறாக கூறியது பெரும் சர்ச்சையாகி உள்ளது. தற்போது பியூஷ் கோயல் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார்.

பொருளாதார மந்த நிலை குறித்து சென்னையில் சில நாட்களுக்கு முன்னர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டியளித்தார். அப்போது ஓலா, உபர் போன்றவைகளை அதிகம் பயன்படுத்துவதால்தான் ஆட்டோமொபைல் துறை கடும் பின்னடைவை சந்தித்தது என கூறினார்.

Today Union Minister Piyush Goyals troll day

இது மிகப் பெரும் சர்ச்சையாக வெடித்தது. சமூக வலைதளங்கள் அனைத்திலும் நிர்மலா சீதாராமன் மிக கடுமையாக விமர்சிக்கப்பட்டார். தற்போது மற்றொரு மத்திய அமைச்சரான பியூஷ் கோயல் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.

டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பியூஷ் கோயல், டிவி சேனல்களில் வரும் தகவல்கள் மூலம் பொருளாதாரத்தை கணக்கில் கொள்ளாதீர்கள்.. ஐன்ஸ்டீன் புவி ஈர்ப்பு விசையை கண்டுபிடித்த போது கணக்கு அவருக்கு உதவவில்லை. நீங்கள் இதை எல்லாம் கவனத்தில் எடுக்க வேண்டாம் என்றார்.

ஐசக் நியூட்டன் தான் புவி ஈர்ப்பு விசையை கண்டுபிடித்தார் என்பதற்கு பதிலாக ஐன்ஸ்டீன் என பியூஷ் கோயல் கூறிவிட்டார். அவ்வளவுதான் விடுவார்களா நெட்டிசன்கள்... சமூக வலைதளங்களில் அதகளம்தான். முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தமது ட்விட்டர் பக்கத்தில், ஆமாம் ஐன்ஸ்டீனுக்கு புவி ஈர்ப்பு விசையை கண்டுபிடிக்க கணக்கு உதவவில்லை. ஏனெனில் அவருக்கு முன்னரே நியூட்டர் அதை கண்டுபிடித்துவிட்டார் என கிண்டலடித்திருக்கிறார்.

இதேபோல ஏராளமான மீம்ஸ்களும் பியூஷ் கோயலின் கருத்தை முன்வைத்து வெளியிடப்பட்டுள்ளன.

English summary
Union Minister Piyush Goyal said that Don't get into calculations about the economy. Don't get into maths. Maths never helped Einstein discover Gravity on today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X