டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அயோத்தி நில வழக்கில் நாளையே இறுதி விசாரணை- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் 'கறார்'

Google Oneindia Tamil News

Recommended Video

    Section 144 Imposed In Ayodhya

    டெல்லி: சர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் நாளைதான் இறுதி விசாரணை என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

    அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடம் தொடர்பான வழக்கு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் 2010-ல் தீர்ப்பளித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், சர்ச்சைக்குரிய நிலத்தை நிர்மோனி அகாடா, சன்னி வக்ஃபு வாரியம், ராம் லல்லா ஆகியவை சரிசமமாக பங்கீட்ட்டுக் கொள்ள தீர்ப்பளித்தது.

    Tomorrow is 40th day and last day of hearing in Ayodhya case, says CJI Ranjan Gogoi

    இத்தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. உச்சநீதிமன்றம் முதலில் மத்தியஸ்த குழு ஒன்றை அமைத்து பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டது.

    ஆனால் மத்தியஸ்த குழுவால் பேச்சுவார்த்தை மூலம் சமரசத்தை ஏற்படுத்த முடியவில்லை. இதையடுத்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் இவ்வழக்கை விசாரித்தது.

    ஆகஸ்ட் மாதம் முதல் நாள்தோறும் இவ்வழக்கில் விசாரணை நடைபெற்று வந்தது. இன்று 39-வது நாளாக விசாரணை நடைபெற்றது. அப்போது, இவ்வழக்கில் நாளை 40-வது நாள் விசாரணை. அதுவே இறுதியான விசாரணை என திட்டவட்டமாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்தார்.

    நாளைக்குள் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடையும். நாடு எதிர்பார்க்கும் இவ்வழக்கின் தீர்ப்பு அடுத்த மாதம் வழங்கப்படலாம்.

    English summary
    The Supreme Court's five-judge Constitution bench, headed by Chief Justice of India (CJI) Ranjan Gogoi, is hearing the Ram Mandir Babri Masjid land dispute case. CJI says, "Today is 39th day. Tomorrow is 40th day and last day of hearing in the case."
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X