டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பயன்படுத்தாமல் இருக்கும் 10 கோடி தடுப்பூசிகள்... பட்டியலில் இடம்பிடித்த உ.பி., மகாராஷ்டிரா, பீகார்

Google Oneindia Tamil News

டெல்லி : தடுப்பூசிகள் அதிகம் பயன்படுத்தாத மாநிலங்களின் பெயர்கள் உள்ள பட்டியலில் முதல் 5 இடங்களை உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார் மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன.

இதனால் மேற்கண்ட மாநிலங்களில் மொத்தம் 10 கோடி தடுப்பூசிகள் இன்னும் செலுத்தப்படவில்லை என்ற அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளது.

கல்வியை பொதுப்பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்து திமுக எம்எல்ஏ வழக்கு: ஜனவரி 3 ஆம் வாரத்தில் விசாரணைகல்வியை பொதுப்பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்து திமுக எம்எல்ஏ வழக்கு: ஜனவரி 3 ஆம் வாரத்தில் விசாரணை

தடுப்பூசிகள் அதிகம் இருப்பதாக கூறப்படும் 5 மாநிலங்கள், தடுப்பூசி போடாத மக்கள் அதிகம் உள்ள மாநிலங்கள் என்ற பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது.

பயன்படுத்தாத 11 கோடி தடுப்பூசி

பயன்படுத்தாத 11 கோடி தடுப்பூசி

இந்தியாவில் சமீபத்திய அரசாங்கத்தின் தரவுகளின்படி உத்தரபிரதேசம், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, பீகார், ராஜஸ்தான், தமிழ்நாடு மாநிலங்களில் சுமார் 11 கோடி தடுப்பூசிகள் போடப்படாமல் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளன. இன்னும் சில மாநிலங்களில் கோவிட் 19 தடுப்பூசியை முதல் டோஸ் கூட முழுமையாக செலுத்தவில்லை என்ற தகவலு வெளியாகி உள்ளது. அரசாங்கத்தின் புள்ளி விவரத்தின்படி தடுப்பூசி பயன்படுத்தாமல் உள்ள மாநிலங்களில் உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், பீகார் மற்றும் ராஜஸ்தான் முதல் 5 இடங்களை பிடித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இதுகுறித்து மாநிலங்களவையில்
மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்பநலம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் நாடு முழுவதும் 23 கோடி கோவிட் தடுப்பூசி கையிருப்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் கடைசி இடம்

தமிழகம் கடைசி இடம்

இதில் உத்தரபிரதேசம் 2.9 கோடி தடுப்பூசிகளை பயன்படுத்தாமல் வைத்திருப்பதால் இது முதலிடம் பிடித்துள்ளது. இதை அடுத்து மேற்கு வங்கம் (2.5 கோடி), மகாராஷ்டிரா (2.2 கோடி), பீகார் (1.80 கோடி), ராஜஸ்தான் (1.43 கோடி) தமிழ்நாடு (1.35 கோடி) மற்றும் மத்திய பிரதேசம் (1.1 கோடி) தடுப்பூசிகள் போடப்படாமல் உள்ளது. மக்கள் தொகை அதிகம் கொண்ட சில மாநிலங்களில்தான் பயன்படுத்தப்படாமல் தடுப்பூசிகள் அதிகம் இருப்பதாகவும், இன்னும் சில மாநிலங்களில் இரண்டு டோஸில் முதல் டோஸ் கூட முழுமையாக போட்டு முடிக்கவில்லை எனவும் அந்த புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் 3.50 கோடி மக்களும், பீகாரில் 1.80 கோடி மக்களும் இன்னும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் இருக்கின்றனர். மகாராஷ்டிராவில் 1.71 கோடி மக்களும், தமிழ்நாட்டில் 1.24 கோடி மக்களும் இன்னும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என புள்ளி விவரம் தெரிவிக்கின்றது.

வீடு வீடாக சென்று தடுப்பூசி

வீடு வீடாக சென்று தடுப்பூசி

100 கோடி மக்களுக்கு தடுப்பூசி செலுத்தவேண்டும் என்பதில் மத்திய அரசு சிறப்பாக செயல்படுவதாகவும், இதுபோன்று தடுப்பூசிகள் பயன்படுத்தாமல் இருந்தால், அது மக்களை பாதிக்கும் என சுகாதாரத்துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதுகுறித்து தடுப்பூசி நிபுணர் ககன்தீப் காங் தெரிவிக்கையில், தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு 70 சதவீத மக்களை எளிதில் சென்றடைந்து விட்டது. ஆனால் மீதம் உள்ள 30 சதவீத மக்கள் அச்சம் காரணமாக தடுப்பூசி போட்டுக்கொள்வதில்லை என தெரிவித்தார். எனினும் வீட்டுக்கு வீடு சென்று தடுப்பூசி போடும் திட்டத்தை நரேந்திர மோடி அரசு தொடங்கி வைத்துள்ளது. இதுநாள் வரையில் முதல் டோஸ் தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை 5.9% அதிகரித்துள்ளதாகவும், 2வ டோஸ் தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கை 11.7 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.

Recommended Video

    Omicron-க்கு எதிராக Covishield, Covaxin வேலை செய்யுமா? | Oneindia Tamil
    கொரோனா தடுப்பூசி

    கொரோனா தடுப்பூசி

    கொரோனா தடுப்பூசி இந்தியாவில் முதல் டோஸ் 80,26,81,922 போடப்பட்டுள்ளது. 2வது டோஸ் 48,49,28,668 போடப்பட்டுள்ளது. ஆக மொத்தம் 1,28,76,10,590 டோஸ் போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் முதல் டோஸ் 23,52,319 இரண்டாவது டோஸ் 55,86,719 ஆக மொத்தம் 79,39,038 டோஸ்கள் போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் வைரஸ் உலக நாடுகள் முழுவதும் பரவி வருகிறது. கொரோனாவின் தாக்கம் குறைந்து வருவதாக மக்கள் நினைத்து வந்த நிலையில் இப்போது புதிய பெயரில் அச்சுறுத்தி வருகிறது. இதனால் தடுப்பூசி போடுவதில் இவ்வளவு நாட்கள் அலட்சியம் காட்டிய மக்கள் தற்போது போடத் தொடங்கி உள்ளனர்.

    English summary
    uttar Pradesh, Maharashtra, West Bengal, Bihar and Rajasthan are the top five states holding around 11 crore balance doses of Covid-19 vaccines.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X