டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

Corona India:இந்தியாவில் ஒரே நாளில் 4,987 பேருக்கு கொரோனா; பாதிப்பு எண்ணிக்கை 90 ஆயிரத்தை தாண்டியது

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 90 ஆயிரத்தை கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் தமிழகம் 3-வது இடத்துக்கு நகர்ந்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரங்களின் அடிப்படையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 90,927 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில்தான் நேற்றுதான் மிக அதிகபட்சமாக ஒரே நாளில் 4,987 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு இந்தியாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 34,109 ஆக உள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2872 ஆகவும் உயர்ந்துள்ளது.

ஆனால் https://www.covid19india.org/ புள்ளி விவரங்களின்படி இந்தியாவில் கொரோனாவின் 90,648 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கொரோனாவால் இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 2,871 ஆகவும் அதிகரித்திருக்கிறது. மொத்தம் 34,224 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். . இந்தியாவில் கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்கள் மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு, டெல்லி ஆகியவைதான்.

இந்த முறையும் முதல் நாளிலேயே அசர வைத்த டாஸ்மாக்.. ரூ.163 கோடி வசூல் இந்த முறையும் முதல் நாளிலேயே அசர வைத்த டாஸ்மாக்.. ரூ.163 கோடி வசூல்

மகாராஷ்டிரா- 30,706

மகாராஷ்டிரா- 30,706

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30,706 ஆக உயர்ந்துள்ளது. இம்மாநிலத்தில் மும்பையில்தான் மிக அதிகபட்சமாக 18,555 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். மும்பைக்கு அடுத்ததாக தானேவில் 3,834 பேரும் புனேவில் 3,647 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் மகாராஷ்டிராவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,135 ஆக உள்ளது.

குஜராத்தில் 10,989 பேர் பாதிப்பு

குஜராத்தில் 10,989 பேர் பாதிப்பு

மகாராஷ்டிராவைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் அதிக பாதிப்பு உள்ளது. குஜராத் மாநிலத்தில் கொரோனாவால் 10,988 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களில் 4,308 பேர் குணமடைந்துள்ளனர். குஜராத்தில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 625 ஆக உள்ளது. குஜராத்தின் அகமதாபாத்தில்தான் 8,144 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்ததாக தொழில் நகரமான சூரத்தில் 1,049 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

3-வது இடத்தில் தமிழகம்

3-வது இடத்தில் தமிழகம்

இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் 3-வது இடத்தில் தமிழகம் உள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,585 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,538 ஆகவும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 74 ஆகவும் அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 6,279 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். சென்னைக்கு அடுத்ததாக திருவள்ளூரில் 526 பேரும் காஞ்சிபுரத்தில் 463 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா மரணங்கள்

கொரோனா மரணங்கள்

கொரோனா மரணங்களில் மகாராஷ்டிராவில் 1,135 பேர் உயிரிழந்தனர். குஜராத்தில் 625 பேரும் மத்திய பிரதேசத்தில் 243 பேரும் மேற்கு வங்கத்தில் 232 பேரும் கொரோனாவால் மரணித்துள்ளனர். இந்தியாவில் திரிபுரா, சத்தீஸ்கர், லடாக், அந்தமான், கோவா, மணிப்பூர், மிசோரம், அருணாச்சல பிரதேசம், டாமன் டையூ, புதுவையில் கொரோனா மரணங்கள் எதுவும் இல்லை.

English summary
TamilNadu became India’s third state Crossed 10,000 coronavirus patients.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X