டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சீனாவின் வர்த்தக போர்தான் பொருளாதார சரிவுக்கு காரணம்.. நிர்மலா சீதாராமன் சொன்ன பரபரப்பு காரணம்!

சீனா மற்றும் அமெரிக்கா இடையே நடக்கும் வர்த்தக போர்தான் உலக அளவில் பொருளாதார மந்த நிலை ஏற்பட காரணம் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    அதிரடி வரி சலுகைகளை அறிவித்தார் நிர்மலா சீதாராமன்- வீடியோ

    டெல்லி: சீனா மற்றும் அமெரிக்கா இடையே நடக்கும் வர்த்தக போர்தான் உலக அளவில் பொருளாதார மந்த நிலை ஏற்பட காரணம் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

    கடந்த சில மாதங்களாக இந்தியா பொருளாதாரம் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. அதிலும் இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவிற்கு மோசமான சரிவை சந்தித்துள்ளது.

    Trade war between China and USA is the reason for Economy slowdown says Nirmala Sitaraman

    தற்போது 1 டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 72 ரூபாயாக குறைந்துள்ளது. இந்த நிலையில் இந்த பொருளாதார சரிவு குறித்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி அளித்துள்ளார்.

    அவர் தனது பேட்டியில், சீனா மற்றும் அமெரிக்கா இடையே தற்போது வர்த்தக போர் நடந்து வருகிறது. இதனால் உலக அளவில் பல்வேறு நாடுகள் பாதிக்கப்பட்டு வருகிறது. இரண்டு நாடுகளும் மாறி மாறி வரி விதித்து சண்டை போட்டு வருகிறார்கள். இதனால்தான் பொருளாதார பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

    சர்வதேச அளவில் பொருளாதார மந்தநிலை நிலவி வருகிறது. உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது நம் நிலை நன்றாகவே உள்ளது. வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள் எல்லாம் சரிவை சந்தித்துள்ளது.

    இந்தியா மட்டும் பொருளாதார மந்த நிலையில் இல்லை. தவறான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார்கள்.

    விற்பனையை அதிகரிக்க வியூகம்.. கார், வீடுகள் விலை குறைகிறது.. நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்புவிற்பனையை அதிகரிக்க வியூகம்.. கார், வீடுகள் விலை குறைகிறது.. நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு

    அமெரிக்கா, ஜெர்மனி ஆகிய நாடுகள் கூட பொருளாதார சரிவை சந்தித்துள்ளது. உலக அளவில் இப்படி வர்த்தகம் மந்தமடைவது புதிதல்ல. சர்வதேச ஜிடிபி மொத்தமாக குறைய வாய்ப்புள்ளது.பொருளாதார சீர்திருத்தம்தான் எங்களின் முதல் கொள்கை.

    English summary
    Trade war between China and USA is the reason for Economy slowdown says Finance Minister Nirmala Sitaraman.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X