டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொடநாடு விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும்.. சுப்ரீம் கோர்ட்டில் டிராபிக் ராமசாமி வழக்கு

கொடநாடு விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் டிராபிக் ராமசாமி வழக்கு தொடுத்துள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: கொடநாடு விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் டிராபிக் ராமசாமி வழக்கு தொடுத்துள்ளார்.

கொடநாட்டில் நடந்த மர்ம மரணங்கள் மற்றும் கொள்ளைகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த மர்ம மரணங்கள் தொடர்பாக தெகல்ஹா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் சில முக்கிய ஆவணங்களை வெளியிட்டார்.

Traffic Ramaswamy files a case in the SC seeking a CBI probe in Kodanad controversy

இந்த விவகாரத்தில் மேத்யூஸ் சாமுவேல், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரடியாக குற்றஞ்சாட்டினார். தற்போது தமிழக அரசு மேத்யூஸ் சாமுவேல் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக டிராபிக் ராமசாமி வழக்கு தொடுத்துள்ளார். கொடநாடு விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் டிராபிக் ராமசாமி வழக்கு தொடுத்துள்ளார்.

கொடநாடு விவகாரத்தை தமிழக காவல்துறை விசாரித்தால் சரியாக இருக்காது. முதல்வர் பழனிசாமி மீது புகார் இருப்பதால் தமிழக காவல்துறை விசாரிப்பது சரியல்ல. அதனால் கொடநாடு விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கோரி டிராபிக் ராமசாமி வழக்கு தொடுத்துள்ளார்.

இந்த வழக்கு எப்போது விசாரணைக்கு எடுக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் இன்னும் தெரிவிக்கவில்லை. அடுத்த வாரம் விசாரணை குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.

English summary
Social activist Traffic Ramaswamy has filed a PIL in the Supreme Court seeking a CBI investigation into the alleged Kodanad estate controversy. SC has not given any date for hearing the PIL
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X