டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நாளை முதல் புது ரூல்ஸ்.. ரயில் புறப்படும் 5 நிமிடத்திற்கு முன்பு வரை டிக்கெட் புக் செய்யலாம்

Google Oneindia Tamil News

டெல்லி: இனிமேல் ரயில் புறப்படும் 5 நிமிடத்திற்கு முன்பு வரை டிக்கெட் எடுத்துக் கொள்ள முடியும். அக்டோபர் 10ம் தேதியான நாளை முதல், இந்த விதிமுறை அமலுக்கு வருகிறது.

கொரோனா லாக்டவுனுக்கு முன்பு, ரயில் புறப்படுவதற்கு அரை மணி நேரம் முன்பாக ​​2வது சாட் ரெடியாகி வந்தது.

கொரோனா காலத்தில் இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களில், 2வது சாட் ரயில் புறப்படும் 1 மணி நேரங்களுக்கு முன்பாக தயாராகி வந்தது. இப்போது அதில் பெரும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

குன்னூர்-ஊட்டி இடையே நாளை முதல் மலை ரயில் சேவை.. சுற்றுலா பயணிகள் குஷி குன்னூர்-ஊட்டி இடையே நாளை முதல் மலை ரயில் சேவை.. சுற்றுலா பயணிகள் குஷி

 5 நிமிடம் முன்பாக புக்கிங்

5 நிமிடம் முன்பாக புக்கிங்

ஆமாம்.. இனி ரயில் நிலையங்களிலிருந்து ரயில்கள் புறப்படுவதற்கு 5 நிமிடங்களுக்கு முன் இரண்டாவது முன்பதிவு சாட் ரெடியாகும். நாளை முதல் இந்த புதிய விதிமுறை அமலுக்கு வருகிறது. ரயில்வேக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட இந்த விதிமுறை பயன்படும். ஏனெனில் முடிந்த அளவுக்கு, அதிகம் பேர் புக்கிங் செய்ய வாய்ப்பு திறக்கப்பட்டுள்ளது.

 இரண்டாவது சாட்

இரண்டாவது சாட்

இரண்டாவது சாட் தயாரிக்கப்படும் வரை ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என்பதுதான் இந்த விதிமுறையின் அர்த்தம். நாளை முதல், சாட் ரயில், புறப்படுவதற்கு 5 நிமிடங்கள் முன்பு வரை வரை தயாரிக்கப்படும் என்பதால், ரயில் புறப்படுவதற்கு 5 நிமிடம் முன்பு வரை டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாமாம்.

 பணத்தை திரும்ப பெறுதல்

பணத்தை திரும்ப பெறுதல்

டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறும் விதிமுறைகளின் படி, இந்த காலகட்டத்தில் டிக்கெட்டுகளை ரத்து செய்யலாம். கொரோனா லாக்டவுன் காலத்திற்கு பிறகு இப்போது நிலைமை மாறியுள்ளது. ரயில்வே பல புதிய ரயில்களை இயக்கத் தொடங்கியுள்ளது.

 சிறப்பு ரயில்கள்

சிறப்பு ரயில்கள்

பண்டிகை காலம் வரும் நிலையில், ரயில்வே ஏற்கனவே புதிய சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில்களுக்கான தேதியை இதுவரையில் அறிவிக்கவில்லை, ஆனால் அவை அக்டோபர் 15 முதல் நவம்பர் 30 வரை இயக்கப்பட உள்ளது.

English summary
From October 10 onwards, railway seats will be available even five minutes before the train leaves the station.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X