டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சரியான நேரத்தில் வரி செலுத்துவோர் நாட்டின் நலனில் அக்கறை கொண்டவர்கள் - பிரதமர் மோடி

நாட்டின் முன்னேற்றத்தில் நேர்மையாக வரி செலுத்துவோருக்கு முக்கிய பங்கு உள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: நியாயமான மற்றும் எளிமையான வரி விதிப்பு என்பது நமது முக்கிய கொள்கையாக உள்ளது. சட்டமும், கொள்கைகளும் மக்களை மையமாக கொண்டதாக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். நேர்மையாக வரி செலுத்துவோரை கௌரவிப்பதற்காக "வெளிப்படையான வரி விதிப்பு நேர்மையாளரை கௌரவித்தல்" என்ற பெயரில் புதிய திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்து இதனைத் தெரிவித்தார்.

வெளிப்படையான வரி விதிப்பு-நேர்மையாளரை கௌரவித்தல்" திட்டம் நேர்மையாக வரிசெலுத்தும் பலருக்கு பயன் தருவதாக அமையும். நாட்டின் முன்னேற்றத்துக்காக வரிசெலுத்துபவர்களுக்கு நன்மை பயக்கும் என நேற்று ட்விட்டரில் தெரிவித்திருந்தார் பிரதமர் மோடி. இதன் மூலம் நாட்டின் வரி அமைப்பை சீர்திருத்தவும், எளிமைப்படுத்தவும், வலிமையாக்கவும் பயன்படும் எனத் தெரிவித்துள்ளார்.

Transparent Taxation Honoring The Honest’ platforme a new milestone says Modi launch

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: கடந்த சில ஆண்டுகளில் நேரடி வரி விதிப்பின் பல்வேறு முக்கிய சீர்திருத்தங்களை மத்திய நேரடி வரிகள் வாரியம் கொண்டுவந்துள்ளது. கடந்த ஆண்டு 30 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக குறைக்கப்பட்டது. புதிய தொழிற்சாலைகளுக்கான 15 சதவீதமாக குறைக்கப்பட்டது பகிர்ந்தளிக்கப்படும் ஈவுத்தொகை மீது வரி விதிப்பதும் ரத்து செய்யப்பட்டது.

இதேபோன்று வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக வருமான வரி செலுத்தும் விண்ணப்பங்கள் எளிதாக வடிவமைக்கப்பட்டன. வரி செலுத்தும் முறையிலும் வெளிப்படைத் தன்மை கொண்டு வரப்பட்டது. மேலும் கொரோனா தோற்று காலத்தில் வரி கணக்கு செலுத்துவதற்காக அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளை தலைவருக்கு கொரோனா.. பிரதமர் மோடியுடன் பூமி பூஜை விழாவில் பங்கேற்றவர்அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளை தலைவருக்கு கொரோனா.. பிரதமர் மோடியுடன் பூமி பூஜை விழாவில் பங்கேற்றவர்

இந்த நிலையில் வெளிப்படையான வரிவசூலிப்பு - நேர்மையானவர்களை கெளரவித்தல்' என்னும் புதிய திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை தொடக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாகூர், பல்வேறு வர்த்தக சங்கத்தின் பிரதிநிதிகள், பட்டயக் கணக்காளர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள், வரி செலுத்திய பிரபலங்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, மத்திய அரசின் திட்டங்கள் நேரடியாக மக்களை சென்று சேருகின்றன. உரிய நேரத்தில் வரி செலுத்துவோர் நாட்டின் நலனில் அக்கறை கொண்டவர்கள் என்று சொன்னார் மோடி. நேர்மையாளரை பெருமைப்படுத்தும் திட்டம் செப்டம்பர் மாதம் முதல் அமல்படுத்தப்படும் என்று கூறிய மோடி

நியாயமான மற்றும் எளிமையான வரி விதிப்பு என்பது நமது முக்கிய கொள்கையாக உள்ளது. சட்டமும், கொள்கைகளும் மக்களை மையமாக கொண்டதாக இருக்க வேண்டும். வரிமுறையை எளிமைப்படுத்துவதன் மூலம் அதிக அளவில் வரி செலுத்துவோரை ஊக்குவிக்க முடியும். நாட்டின் முன்னேற்றத்தில் நேர்மையாக வரி செலுத்துவோருக்கு முக்கிய பங்கு உள்ளது.

வரி செலுத்தும் முறை மிக எளிமையாக இருக்க வேண்டும். நேர்மையாக வரி செலுத்துவோர் நாட்டின் வரி வசூலிப்பு முறை மீது நம்பிக்கை கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    Chennai to Andaman கடலடியில் நீர்மூழ்கி கண்ணாடி இழை கேபிள் | oneindia

    English summary
    Prime Minister Narendra Modi on Thursday launched a platform to honour the honest taxpayers of the country. He said that it will be a new milestone in the structural reforms initiaited by the government.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X