டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம் விதித்த தடையை உறுதி செய்தது தீர்ப்பாயம்

Google Oneindia Tamil News

டெல்லி: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம் விதித்திருந்த 5 ஆண்டுகால தடையை டெல்லி தீர்ப்பாயம் உறுதி செய்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான 5 ஆண்டுகால தடை மே மாதம் முடிவடைந்தது. இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்தது.

Tribunal upholds Centres 5 year ban on LTTE

இத்தடை தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்ற நீதிபட்தி சங்கீதா திங்ரா செகல் தலைமையில் தீர்ப்பாயத்தையும் ஜூன் மாதம் மத்திய அரசு அமைத்தது. இதனைத் தொடர்ந்து இத்தீர்பாயம் விசாரணை நடத்தியது.

மது பார், ஸ்பா.. ரூ.1.20 லட்சம் கட்டண வில்லா.. மகாராஷ்டிரா காங். எம்எல்ஏக்கள் வாழ்றாங்கப்பாமது பார், ஸ்பா.. ரூ.1.20 லட்சம் கட்டண வில்லா.. மகாராஷ்டிரா காங். எம்எல்ஏக்கள் வாழ்றாங்கப்பா

இதில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் வாதிட்டனர். இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த புலிகள் இயக்கத்தின் மீதான 5 ஆண்டுகால தடையை டெல்லி தீர்ப்பாயம் உறுதி செய்துள்ளது.

English summary
Delhi Tribunal headed has upheld the 5 Year ban imposed by the Union Home Ministry on the LTTE.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X